Quantcast
Channel: Ramya Pennin(g)Thoughts
Viewing all 26 articles
Browse latest View live

UGADI ShuBhaKaNkShALu

$
0
0

Ugadi! I mark Ugadi being special to me as it was during one such featival did amma ask me to help(???) her in cooking.There I started with experimenting my cullinary skills. Appa became "The Scapegoat" for the very few dishes I tried.May be because of the threat to his life/was it because he being a better cook he asked me to concentrate on other activities.Poor Appa :) .Now forced to cook and eat my own food in Uncle Sam's Country,I have started re-inventing my interest in cooking. Poor roomies this time ;)

Being a telugite born in Tamil Nadu, never did I get a chance to see how the actual celebrations were in AP.Still we get a chance to celebrate and of course eat mouth watering dishes on both occasions!

What are the celebrations like?

We wish our near and dear ones
Pray god
Get blessings from elders
Eat Ugadi Pachadi ( Sweet-Sour Mix made of Mango pieces,Jaggery,Neem Flowers and little tamarind water)symbolising that life is also a mixture of happiness,Sorrow,bitterness but still remains exciting and adventurous.
Listen to appa reading Panchangam and hope for things to be finer this year too :).

Friends Wish you all a very Happy Ugadi and May this Year bring more and more success to your life making it a remarkable year !

Eeee Ugaadi Meeku Entho Subhapradam Kaaavaaalani Korukuntoo......Ramya











Namma Ooru Seemati-Final Part

$
0
0
நாங்க ரெண்டு பேரும் இப்படி ஷாப்பிங் கெளம்பினோம்.இந்த ஊர்ல ஒரு "High End Shopping Mall" கொஞ்சம் தூரம் இருந்தது.Directions எல்லாம் எடுத்துண்டு பஸ் பிடிச்சு அங்க போனோம், அங்க நெரைய்ய கடைகள்.

நம்ம தலைவி லிச்ட் வேர கொஞ்சம் பெரு(ஊ)சு.இங்கே வர இன்டியன்ஸ் ஷாப்பிங் வந்தா ஒரு நடமாடும் கால்குலெடர் மாதிரி ஆயிடுவோம்.எந்த பொருள் பாத்தாலும் உடனே (*40)போட்டிடுவோம்.

முதல்ல நம்ம தலைவி-ஒட அக்காக்கு எல்லாம் வாங்கிருவோம்னு Handbag Section-க்கு போனோம்.நம்ம பிரண்டுஆச்சே உதவி பன்னுவோம்னு போனா,நம்ம செலக்க்ஷன் எதுவும் அவங்களுக்கு பிடிக்கல.ஸெரி நாம இனிமே கருத்து மட்டும் சொல்வோம் அவங்களே செலெக்ட் பன்னுங்கன்னு பாத்தா,நல்லா ஜிகு ஜிகுன்னு மின்னர மாதிரி இருக்கர பாக் எடுக்கராங்க.கேட்டா "Foreign Look".கலி காலம் டா பெருமாளே!

நல்லா அலஞ்சு அலஞ்சு பர்சேஸ் பன்னி டயர்ட் ஆகிடோம்.ஸெரி எங்கேயாவது சாப்பிடலாம் பாத்தா எங்கேயுமே வெஜிடேரியன் கெடைகலை. கொஞ்சம் தேடினப்பரம் SUBWAY கண்ல மாட்டித்து.நம்ம தலைவியோட Ex-Roomie ஒருத்தர் ஒரு நாள் ஆர்டர் பண்னத எங்கெயோ மூளை-ல Backup பண்னி வெச்சிருந்தாங்க.அத Refresh பண்னி ஆர்டர் பன்ராங்க. ஏதொ எலை தழை கொடுத்து சாபிடுங்க்ராங்க,டிஷோட பேரு என்னனு கேட்டா "Veggie Delight(????)".இது என்னடாப்பா நமக்கு வந்த சோதனைன்னு சாப்பிட்டுடேன்!( தலைவி, நீங்க இத படிச்சிட்டு உங்க ட்ரீட் கான்சல் பன்னாதீங்க!)

நாம வந்து இவ்ளோ நாள் ஆரதே வெளிய வேர வந்திருக்கோமேனு எடுக்கலாம்னு நெனச்சேன். Halloween Day-காக கடைகளில், பொம்மை இருந்துது.ஒரு Ghost பொம்மை கிட்ட நின்னு Photo எடுத்தோம்!அத வீட்டுக்கு அனுபிச்சா "ஓரு பேய்யே பேய் பொம்மை கிட்ட நிக்குதே!(ஆச்சிரியகுறி)ன்னு என் அருமை தங்கை நக்கல் அடிச்சத நான் இங்க சொல்ல மாட்டேன்.

இப்படி சில பல காமெடி எல்லாம் பன்னி நான் இங்க நள ஒட்டிகிட்டு இருக்கேன்.
ஓரு Homebird-ah இருந்த நான் இங்க வந்து நெரைய்ய கத்துகிட்டேன்.

கொஞ்ஞம் இங்கிலீஷ்ல மொக்கை(!!!!!!)

Few Changes in My Life
1.Learnt to be Independent (தனியா வீட்ல இருக்கவோ,சாப்பிடவோ எனக்கு அறவே பிடிக்காது.இப்ப 2 நாள் கூட தனியா இருப்பேன்)
2.I could think and take decisions on my own.
3.Learnt to solve problems instead of reacting emotionally.
4.Learnt to be patient.
5.I Was so pampered @ home that for every small need of mine would trouble my parents and sis.It is different now,I plan and purchase things for them either online/in-store!
6.Most Importantly started a blog!
Based on my personal experience,I would recommend every person to be out of home for sometime.Eventually one can meet different people,realise that Life is always not a bed of roses and understand what do they actually want in life!

Hope my stay here would teach me much more and make it memorable!

என்னோட இந்த ப்ளாகுக்கு இது நாள் வரை காமன்ட் போட்ட/போடபோர மக்கள் எல்லாருக்கும் நன்றி!

Musical Wishes

$
0
0
I have seen people dedicating songs to their loved ones ! I too prefer to do it! Hold on this dedication is for my Sister for her birthday!She is like a mirror reflecting what I feel. Miles apart I could only wish her on her bday! My best wishes for her to succeed in her life and in her career which she loves than anything else in this world!

But will it be fair on my part to dedicate a single song for her? Nah ! So here goes the list of songs we both love.

I managed to mention few lines about the song too!

Kaiyil Midakkum kanava nee - Ratchagan
Nagarjuna Would have pretended to have lifted Sushmitha with ease!But you could see his face showing some strain midway! :)

Ishq hua - Aaja nachle
Sooper Songs From Aaaja nachle.Kunal Kapoor was looking sooo cute ;).Especially the lines
"Kadmo ko sambhaleNazaro ka kya kareinNazro ko sambhaleto Dil ka kya karein
Kadmo ko sambhaleNazaro ka kya karein " Love them

Mandram Vandha Thendral - Mounga Ragam
Who can beat Raja in scoring the music for this wonderful sooper dooper movie! But I came to know recently that the background score for this movie was "Inspried" . See this

Nee oru Kadhal Sangeetham - Nayagan
Again a Master Piece From Raja !

Sangeetha Swarangal - Azhagan
Hmm Indha pattulaye naan wait panradhu , for a familiar music at 3.02 minute.

Keeravani - Padum Paravaigal
Wonderful Song. Have heard Telugu Version also.But my favorite is in Tamil.

Pon maalai pozhuthu -Nizhalgal
I love this lyrics

Moongil Kadugale - Samurai
Cinematography at its best!

Tere Bina - Guru
What to say? Whom to Envy Aishwarya for her dance or Abhi for his charm or ARR for his music or the Sweet Surprise Chinmayi!

Yeh Ishq - Jab we met
Dunno why but I am crazy about this song.

Pehla Nasha - Jo Jet Wo Sikandhar
Love this song!

Thendrale - Kadal Desam
Soft Nice music.Dont remember how many times I have asked my friend to sing this song!

Veesum Katrukku Povai teriyadha - Ullasam
Melodies are my favorite!This is no exception for that

Churidhar aninthu - poovellam kettuppaar
Hmm Did I fall in love with this couple from this song .Should be!

Nadhiye Nadhiye - Rhythm
Another nice song! Me and my sis made my appa a fan for this after our repeated listening and so called "Othu Padaradhu" ;)

Poove Vai Pesum Bodhu - 12B
Nice song which drove me crazy!

Azhagu Nilave - Pavithra
I cry everytime I listen to this song! But still I do not stop listening

Padariyen - Sindhu Bhairavi
My dream when I started learning music was to sing this song and secure prize.Though It never happened and now I dont have the heart to do unjustice ! :(

Yamuna Theeram - Anand
Nice Song which made me watch this movie many times.

Narumugaiye - Iruvar
Ever seen a movie where almost many did justice to what they are to do? If not Watch this movie and song

Enna Idhu enna idhu - Nala Damayanthi
Lovely song..Maddy and Geetu Mohandas have acted well

Agaya Gangai - Dharma yudham
Rajini has a typical style even for Romantic Songs! This song is a best example!

Jashan E Bahra - Jodha Akbar
Nice song!Aishwarya and Hrithik carried themselves in their roles very well in this movie!

Kal Ho Na Ho - kal ho na ho
There comes our Don with the voice of Sonu Nigam.Man his voice mesmerises!

One Love - Blue
I rarely listened to English Songs.This Song changed my mind! My Thangachiiii's ;) favorite!

Putham Pudhu Boomi - Thiruda Thiruda
One more song with superb lyrics!

Kalyana Malai Kondadum Penne - Pudhu Pudhu Arthangal
Guess Bala would have really enjoyed singing this song.Music,Voice everything was at its best.

Enna Samayalo - Unnal Mudiyum Thambi
Movie with wondeful songs! I sang this song when I attempted cooking,and realized " Not Every Person who attempts to make a Sambhar is regarded a Cook"

Partha Nyabagam Illayo - Pudhiya Paravai
Who said there wasn't any attempt for western type of music in yesteryears?

Vellai Pookal - Kannathil Muthamittal
A song that aptly fits the title!

P.S : I had managed a Post in this Sakku :-P

Potato Fry in 5 minutes For Dummies

$
0
0
Last weekend I had a friend visiting me . Quickly flashed a thought in me to prepare Something good for her. Being dismissive to spend much time in kitchen I started to fish out for a recipe which can be cooked faster and tastier.

Hunting through my groceries I found this pack of potatoes. I realized that it had been long since I had tasted a potato fry believe me it had been nearly 6 months :(
So decided to prepare it as it goes well with rotis or rice. But the time I had to spend in frying it brought me to reality !

It was then did I think why not I use Microwave to make my job simpler. Patting myself for idea (!!!), I ventured into the task. Tuned to a strategy in developing prototype before starting a new project, I did my experiment with 1 potato ;)

Here goes the method to prepare crispy potato fry in 5 minutes

1. Slice/Dice the potatoes into thinner pieces.This would help them to get cooked faster.
2. Spread them in a Microwaveable plate and microwave them for 2 minutes.
3. Take a kadai and heat 1 tbsp of oil.(Can be varied according to taste. I prefer less oil).
4. Once the Oil heats up add channa dhal,urad dhal, dried red chilles,jeera and mustard for tadka.
5. After the mustard splutters, add a pinch of chilly powder and salt to it.
6. Later add the potato cubes and mix them well.
7. Leave it for sometime until potatoes get fried well.
8. Serve it with hot rotis or Sāmbhar and rice like a typical South Indian :P

P.S: Got few tips from amma
1.To make it further tasty, add a pinch of Besan Flour(Can be done for any fry especially for Brinjal)
2.Do not add water when you microwave it. It becomes softer and you will loose crispiness.

Magic of Numbers

$
0
0
Mathematics/Maths is the most wonderful subject I had ever known. Nothing amuses me as solving problems in maths. I feel that the subject explains the essence of life wonderfully. There is no problem without a solution and all you need to do is to apply right logic at the right time to arrive at solution.

When It comes to learning maths, many cultivate an aversion towards the subject. Imagine it a game of numbers, then you will relish the act of problem solving.

When I was a kid I had kept a technique to deal with maths problems. I would imagine every problem to be a small treasure hunt. I would like to share few techniques which I followed and eventually ended up making it my favorite subject.

Problem Solving Technique

1.When you are given a problem, just read through it, look between the statements, you will end up finding hints which help to understand it better.
2.Split the problem to pieces and list down information available and what is to be arrived at.
3.Categorize the problem. I mean Classify which subject is it related to say Algebra,Trignometry.

I had this habit of imagining that I was flipping through pages of my textbook. Once I categorize the problem, and I find it to fit into chapter 5, I imagine that I am flipping though pages of that chapter.This may sound weird but it really helped me to track down the best fit.

4.Categorize it further to match it to a theorem/formulae.
5.List down the formulae you find related to it.
If you have followed perfectly till step 5 , Congrats you are almost there :).
6.Now place the information you have obtained from step 2 to the formulae you have.
7.With little of practice you made prior to exams and using common application knowledge you will end up finding solution to the problem.
8.Congratulate yourself for arriving at the destination(Hey you started it as finding a Treasure right..here you are!! )

Tips to Enjoy learning maths

1.Take a piece of paper and list down the chapters you have and pin it above your desk.
2.Once a chapter is complete list down all possible formulaes in a paper and file it. Take quick glances every day. You will end up memorizing them easily.
3.Practice maths problems never attempt to read them like reading a story book. Practice makes a man perfect :)! This will help you to face problems with courage in exams. During practicing problem, We tend to get stuck mid way and we try to solve them. If you face similar situation in exam, you can go over the hurdle with ease.
4.Attempt to solve problems using different approaches. Enables you to adopt new ideas. who knows you may end being a B-School grad "Thinking Out of Box" in future ;)
5.Discuss with peers and help out friends who struggle to solve problems. You will gain a lot.

I used to think myself as a teacher and practice as if I am teaching a student ;)


Learning Made Simpler

Would you like to be called a "Super Computer" calculating at random rates? Welcome to the world of "VEDIC MATHEMATICS".
For literature about it read here .

I am presenting few simpler techniques I learnt.

Multiplication of a two digit number with 11

What is 11 * 12 ? Oh don’t start multiplying, here is a simple method.

11 * 12 = 1 (1+2) 2 = 132

11 * 13 = 1 (1+3) 3 = 143

11 * 24 = 2 (2+4) 4 = 264

11 * 38 = 3 (3+8) 8 = 418 (Carry on from addition to be added to 3)

Square of a two digit number which is a multiple of 5

35 * 35 = (3*4) (5*5) = 1225

1.Seperate the ten's place and one's place.
2.For Ten's place multiply the ten's place number with its immediate successor .
Example: In above illustration, we have to find square of 35 so multiplying 3 with its immediate successor 4 will give the
result

65 * 65 = (6*7) (5*5) = 4225

55 * 55 = (5*6) (5*5) = 3025 Bingo!

Doesn't it look simpler and easy ? Of course you will relish the magic of numbers once you start using these techniques :)

We do have so many tutorials and books on this vast subject which cannot be discussed in one go. We will discuss some more Simpler techniques in next part.

Magic of Numbers- 2

$
0
0
Earlier post about maths made me feel that I have so many people around who have some resonance with my thoughts! Made me feel really enthusiastic to work on and present few more in this

1.Subtracting any number from 100, 1000

1. Subtract 689 from 1000

Step 1: Subtract numbers 6, 8 from 9
Step 2: Subtract unit's place value 9 from 10

1000 - 689 =
9 9 10
-6 8 9
---------
3 1 1

Ans : 1000-689 = 311
2. To divide any number from 9

Example: 32142 / 9

Step 1 : Put down 3 as it is
Step 2 : Add 3 + 2 = 5
Step 3: Add 5(From previous Step) to 1 = 6
Step 4: Add 6(From Previous Step) to 4 = 10 (Carry over 1 to previous Step.So Value in Step 3 becomes 7)
Step 5: Add 10 (From Previous Step) to 2 = 12
Step 6: Divide 12 from 9 and quotient is 1

So The answer is 3 5(6+1)(0+ 1- Quotient value) = 3571

For Demo of this trick check here

3.To quickly divide by 5, 50 and 500

/ 5 - * by 2 and move decimal left 1 time
/50 - * by 2 and move decimal left 2 times
/500 - * by 2 and move decimal left 3 times

Example:

3456 * 5 = (3456 *2) and move decimal left 1 time = > 691.2
3456 * 50 = (3456 *2) and move decimal left 2 times = > 69.12
3456 * 500 = (3456 *2) and move decimal left 3 times = > 6.912

For Demo of this trick check here

4.To add large numbers

238 + 644

238 = 240 - 2 (Number added to 238 to round it off)
644 = 650 - 6 (Number added to 644 to round it off)

240
650
-----
890 - 8 [6+2]
-----
882
-----
This works fine for larger numbers also. But I feel the a better way is

456 + 567

Start adding from left to right

Adding 4 + 5 = 9.Now before concluding the digit see the numbers in next place. It is 5,6 we know that 5+6 = 11 so we have a carry over so the step becomes
(4+5) (5+6) (6+7)
9(1) 1
11 1
Now first place value from left is complete and the sum is 10

See the next place value which is 6, 7 again we have a carry over. So the step becomes
(4+5) (5+6) (6+7)
9(1) 1(1) 3
10 2 3

Ans = 1023
This method is the best and quickest method which can be achieved only with PRACTICE and able to visualize numbers.

5. To get square of a number

(12)^2

Step 1: Square 2 = 4
Step 2: Multiply (1*2) and double it => (2+2 = 4)
Step 3: Square 1 = 1

(12)^2 = 144

(123)^2

Step 1: Square 3=9
Step 2: Consider 12 as a single number. So (12*3) +(12*3) => 36+36 = 72 (Here 7 becomes carryover)
Step 3: Square 12 = 144

(123)^2 = (144+7)29 = 15129

For additional quicker and informative tricks check out Mathemagics videos

மென் துறையில் பெண்கள் ஒப்புக்குச் சப்பானியா..? - என் கருத்துக்கள்

$
0
0
இன்று வலைபூக்களை படித்து கொண்டிருக்கையில் வள்ளி அவர்கள் எழுதிய இந்தபதிவை படிக்கநேர்ந்தது. அவர் கூரும் கருத்துக்களை 3 விதமாக பிரித்து கொள்வோம்
1. மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்
2. சமூகத்தில் பெண்களின் நிலை.
3.மென் துறையில் பெண்களின் நிலை.

மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்
மென் துறையில் வேலை வேண்டுமா? நீங்கள் என்ன பயிற்சி பெற வேண்டும் எப்படி திறமையை வளர்த்துகொள்ளவேண்டும் என்பதை பற்றிய தெளிவான ஒரு தொடரை திரு வெட்டி அவர்களே பதிவிட்டிருக்கிறார்.படிக்க இங்கேசொடுக்கவும்.
வள்ளி அவர்கள் கூருவது போல, ஆங்கில பயிற்சி முக்கியம்.நான் இருப்பது தமிழ்நாடு எனக்கு ஆங்கில அறிவு எதற்க்கு என்ற வாதம் வேண்டாம்.நாம் அதிகம் வேலை செய்யபோவது வெளிநாட்டினருக்கே,அவர்களிடம் பேச ஒரு பொது மொழியாக ஆங்கிலத்தை கருதலாமே!என்ன தான் நீங்கள் அறிவில் கூர்மையாக இருந்தாலும் அதை வெளிப்படுத்த மொழி பயிற்சி அவசியம்.

சமூகத்தில் பெண்களின் நிலை
நம்முடைய சமூகத்தில் பெண்களின் நிலை மாறியிருக்கிறதா என்றால் "ஆம்" என்று சொல்வேன்.இப்போது பெண்கள் வேலைக்கு செல்வது மிகவும் எதார்த்தமாக கருதப்படுகிறது இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கு பிடித்த வேலை செய்யும் அளவு.ஆனால் நம் மனதில், பெண்களை ஆணுக்கு சமமாக எல்லா நேரங்களும் ஒப்பிடுகிறோமா என்றால் இல்லை தான். உதாரணதிற்க்கு, விஜய் டீவி வழங்கிய "நீயா நானா"வில் வாதிட்ட ஒரு பெண் "நான் பெண் என்பதால் விரும்பிய படிப்பு படிக்கவைக்க்வில்லை".இது சில வீடுகளில் இன்னும் நடக்கும் கசப்பான உண்மை.

வள்ளி அவர்களில் பதிவில் ஒருவர் பின்னூட்டதில் குறிப்பது போல் "பெண்கள் கணிதத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள்". இதை நான் ஏற்று கொள்ள மாட்டேன்.ஏன் எவ்வளவு பெண்கள் கணிதத்தை விருப்பபாடமாக எடுத்து படிக்கிறார்கள்? பெண்/ஆண் குழந்தையோ பாடங்களை படிக்க சிரமப்பட்டால், அவர்களுக்கு பிடித்தாற்போல்,அவர்களுக்கு பிடித்தம் வருவது போல் சொல்லிதறவேண்டும்.

ஆனால், இன்னும் சிலர் கூரும் சில வாதங்கள்

1. பெண்கள் அதிக நேரம் புத்தகத்தை வைத்துக்கொண்டு மனனம் செய்து மதிப்பெண் எடுக்கிறாள்.ஆண் பிள்ளைகள் விளையடிக்கொண்டே இருந்தாலும் கடைசி நேரத்தில் படித்து மதிப்பெண் எடுக்கிறான் - இதை நான் மறுக்கிறேன் , நானும் ஒரு பெண் என்பதால் அல்ல.சில பெண்கள் இயற்கயிலேயே, "Reserved Type"ஆக இருப்பர்.ஷாப்பிங் செய்தோ,டீவி பார்தோ வீட்டிலேயே இருப்பதால் அவ்வாறு சிலருக்கு தோன்றுகிறது.ஆணோ பெண்ணோ, மனதை ஒருமித்து படித்தால்,எளிமையாக படிக்கலாம் இல்லையா?

2.சிலர் இவ்வாறு கூற கேட்டிருக்கிறேன் "பெண் IIT Coaching எல்லாம் சென்று என்ன செய்ய போகிறாள்,எப்படியும் கல்யாணத்திற்க்கு பிறகு வீட்டை பார்த்து கொள்ள வேண்டியவள் தானே". ஏன் பெண் IIT-யில் படித்தாலோ, மருத்துவம் படித்தாலோ குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்ள மாட்டாளா? அவளால் படிப்பிருந்தால் இன்னும் தீர்கமாக யோசிக்கமுடியும் தானே? Personal/Professional Life என்று வரும் போது அவர்களின் குடும்ப சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கலாம்.அதற்காக அவளின் படிப்பிற்கோ,கனவுகளுக்கோ தடை செய்ய கூடாது என்பது என் கருத்து.
மென் துறையில் பெண்களின் நிலை
1.அழகு பார்த்து வேலை கிடைக்கிறது - எல்லா உயிரினமுமே ஒரு விதத்தில் அழகு என்றாலும், புற அழகை பார்த்து வேலை கிடைப்பது இல்லை. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் போது அதற்கேற்றார் போல் உங்களை Present பன்னி கொள்ளவேண்டும்."Toilet Slipper"ஓடு ஆபீஸ் செல்ல முடியாது தானே? உங்களுக்கு பிடித்த,வேலைக்கேற்ற decent ஆன உடைகளை அணிந்தால் "Self Confidence" வளரும்.

2.சக பெண் பணியாளர்களை மதிப்பது -
பெண்களை அவர்களின் டீம்களில் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.வேலை என்று வந்த பின்னர் ஏன் அவர்களின் பால் கருதபடுகிறது? ஏன் அவர்களால் நல்ல Solutions/Suggestions கூற முடியாதா? எனக்கு தெரிந்த வரை பெண்கள் பொருமையாக யோசித்து Long term Solutions கொடுப்பாள் என்று நம்புகிறேன்.அதற்காக ஆண்களால் முடியாது என்று சொல்லவில்லை.வேலை என்று வந்தவுடன் பால் பார்காதீர்கள்.பெண் என்பவள் கடலை போடவோ,Relax பன்னி பேசுவதற்காக மட்டுமே இல்லை.அவளும் உங்களை போல் ஏதொ சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வந்தவள் என்பதை சிரிதேனும் நினையுங்கள்.

3.பெண்கள் உயர் பதவியில் இருப்பது
சில நேரங்களில் பெண்கள் அவர்கள் திறமையாலே உயர் பதவியில் இருந்தாலும், அதை சிலர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.அவளின் "Character" பற்றிய பேச்சு வருகிறது.இந்த நிலை மாற வேண்டும்.Office Politics என்பது மிகவும் பரவலாக இருப்பது தான்.இதில் அப்பெணின் வளச்சியை கொச்சை படுத்த வேண்டாமே! அப்பெணின் செயல் திறமையை மட்டுமே பாருங்கள்.

மழலை மொழி

$
0
0
'குழல்இனிது: யாழ்இனிது' என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்அப்படீன்னு சொல்வாங்க.மழலை மொழிங்கரது கேட்க்கும் போது அவ்ளோ நல்லா இருக்கும்.நாம எல்லாருமே பொதுவா சின்ன வயசுல நிறைய மழலை மொழில பேசியிருப்போம்.இப்பகூட நம்ம வீடுங்கள்ள,நாம பேசினத சொல்லிட்டு இருப்பாங்க.ஏன்
உதாரணத்துக்கு எடுத்துகிட்டீங்கன்னா,எங்க வீட்ல என்ன வெச்சு நக்கல் அடிக்கர ஒரு விசயம் இருக்கு. நான் ஒரு ஒன்றரை வயசு குழந்தைய்யா இருக்கும்பொது ஜன்னல் கிட்டஉட்கார்ந்து வேடிக்கை பாத்துகிட்டே இருந்தேனாம் அப்போ தெருவுல"ரூபாயிக்கு ரெண்டு"னு குரல் கேட்டுட்டு "அம்மா தெருவுல ரூபா விக்கரானாம்.ஒரு ரூபா கொடுத்தா, ரெண்டு ரூபா தருவாராம்.போய் வாங்கிக்கோ"ன்னுசொன்னேனாம்.அம்மா போய் பார்த்தா தெருவுல எலுமிச்சம் பழம் வித்தாங்களாம் :P.

என்னோட கசின் ஒருத்தனுக்கு "க" வராது."த"ன்னு தான்சொல்லுவான். அவன் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து "பெரியம்மா அம்மா டீவதிதத்தி தேதாந்த"னான்..எங்களுக்கு அவன் சொல்றது என்னானு புரிஞ்சுக்கவேகொஞ்ச நேரம் பிடிச்சது.அவன் கேட்டது டீ வடிகட்டி!!

அவன ஒரு நாள் கோவிலுக்கு கூட்டிட்டு போனா அர்ச்சனைபண்ணும் போது நட்சத்திரம்,ராசி கேட்டா நான் சொல்றதுக்கு முன்னாடியே"நான் தண்ணி ராசி மாமா"ங்கிறான்..அப்புறம் தான் தெரியுது அவன் சொல்ல வந்தது"கன்னி"ராசின்னு:)

இப்படி மழலை மொழி கேட்க்கும் போது நமக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கும்.என்னோட பெரிய பொழுதுபோக்கே நண்டும் சிண்டுமா நாலு பசங்களகூப்பிட்டு வெச்சு விளையாடறது தான்.கள்ளம் கபடம் இல்லாம வெகுளியா நீயாநானானு போட்டி இல்லாம வெளிப்படைய்யா பேசும்.

ஆனாநான் அப்படி வாண்டுங்களோட பேசி விளையாடி "பல்பு" வாங்கிருக்கேன்.எங்க வீட்டு பக்கத்துல ஒரு சின்னபொண்ணு ரெண்டு வயசு ஆகியும் பேசாம இருந்தான்னு அவங்க அம்மா வருத்தபட்டாங்க.ஆனா அவ பேச அரம்பிச்ச அப்புறம் எல்லாருமே வாய் அடச்சுபோனோம்.அவளுக்கு நான்னா செம லொள்ளு,நக்கல் எல்லாம். அவளோட நல்ல கதை பேசறது,விளையாடறதுன்னு ஒரே ஜாலியா இருந்தேன்.

யாரோ கண்ணு வெச்சு, நடுவுல ஆணி அதிகமாகி இன்னிக்கி நாள் என்னானு தெரியாம ஒரு மாசம் ஆப்பீஸே கதின்னு இருந்தேன்.ராத்திரி ஆபீஸ்லேர்ந்து வீட்டுக்கு வரும் போது அவளும் அவங்க அம்மாவும் அவங்க அப்பாக்காக வெயிட் பண்ணிகிட்டு இருப்பாங்க.

இப்படி இருக்கும் போது,
ஒரு நாள் எங்க அப்பா ஏதோ அசோசியேஷன் பத்தி பேச அவங்க வீட்டுக்கு போயி கதவதட்டினா, இந்த அம்மா ஜன்னல் வழியா எட்டி பாத்துட்டு "அப்பா நம்ம ரம்யாவோடஅப்பாதான்பா கதவ தொற"ன்னு சவுண்டு விட்டிருக்கா."யாரு டா ரம்யா"ன்னு அவ அப்பா கேட்டா "தினம் ராத்திரி பிசாசு வர நேரத்துக்கு வீட்டுக்கு வரீங்கனு அம்மா சொல்லுவாங்க இல்ல,அதே மாதிரி வருவா ரம்யாவும்".இதை கேட்ட அவருக்கும்ஷாக்கு,எங்க அப்பாவுக்கும் தான்.நாம வீட்ல எப்படி பேசறோமோ அதையே தான்குட்டீசும் பேசும்.அதனாலே நாம பேசும் வார்தைகளை பார்த்து பேசனும்
(ஸ்ஸ் அப்பா கருத்து சொல்லியாச்சு).

எங்க அம்மா வீட்ல சில குட்டி பசங்களுக்கு டியூஷன் சொல்லிகொடுப்பாங்க.அதுல நந்தினினு ஒரு பொண்ணு நல்ல சேட்டை பண்ணுவா. நான் மேலசொன்ன குட்டி பொண்ணு என்ன கிண்டல் பண்ணதால பீலிங்ஸ் ஆகி (சும்மா கிலியன்ட் செர்வெர் டவுன் ஆனது தான் உண்மை) 6 மணி பஸ் புடிச்சு வந்தா எங்க வீட்ல படிச்சிட்டு இருந்த அவ "என்ன அக்கா எப்ப வந்தீங்க ஊர்லேர்ந்து"னா."என்ன நந்தினி நான் ஊர்ல
தானே இருக்கேன்"னு சொன்னா

"உங்கள பாத்தே ரொம்ப நாள் ஆச்சா அதான்"ங்கரா..இதை கேட்ட எங்க அம்மா ரியாக்க்ஷன் நான் சொல்லவே தேவைஇல்லை..சரி விடு ரம்யா இதெல்லாம் உனக்கு சதாரணம்னு நெனைச்சிட்டு விட்டுடேன்.ஆனா விதிவலியது..விடாம அவ "ஏன் அக்கா இனிமே எங்களோட எல்லாம் விளையாட மாட்டீங்களா எப்பவுமே ஆஃபீஸ்தானா"அப்படின்னு சொன்னா. எங்க அம்மா நடுவுல வந்து ஏதாவதுசொல்லிருவாங்களோன்னு
"ஏய் நந்தினி சும்மா லொட லொடன்னு இப்ப கேள்விஎல்லாம் கேக்காதே 4த் ஸ்டேண்டட் வந்துட்டே ஒழுங்கா படி"ன்னு சொன்னா "அய்யோ அக்கா வேலைக்கு போயி ரொம்பவே எல்லாம் மறந்துடீங்க..நான் இப்ப 5த் ஸ்டேண்டட் "ங்கரா.
சரிடா நாம இனிமே இங்க இருந்த நல்லதில்லேனுகோவிலுக்கு ஒடிட்டேன்.

ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்தா அப்பா "என்னம்மா உன் பிரண்டு என்னோட காபி எல்லாம்சாப்டுட்டா".அது யாருப்பா ன்னு நான் நினைக்கும் போதே "எல்லாம் வசு தான் மார்கெட்ல பார்த்தோம் அவளையும் அவ அப்பாவையும்.சேர்ந்து காபி சாப்டோம்.அவரு அன்னிக்கி முதல்ல நீ அவளோடவிளையாடற சின்ன பொண்ணுன்னு நினைச்சாராம்.உங்க பொண்ணு வேலைக்குபோறாங்கண்ணு தெரியாது.இவ கிட்ட அக்கான்னு கூப்பிட சொன்னா,இல்ல ரம்யாஎன்னோட டாக்டர் ஸெட் வெச்சு வெளயாடுவா அதலனால அக்கான்னு எல்லாம்கூப்பிடமாட்டேன்னு சொல்றா சார்".
"என் பொண்ணு குழந்தை மனசு உள்ளவனு சொல்லுங்க பா" ன்னு சொல்லிட்டு அந்த எடத்த விட்டு எஸ் அகிட்டேன்.

இப்ப நினைக்கும் போது சிரிப்பா வருது. ஆனா அந்த நினைவுகள் ரொம்ப பசுமைய்யா, சந்தோஷமா இருக்கு.மனசு சரி இல்லேன்னா ஒரு குழந்தைய போயி பாருங்க.அப்படியே லேசாகிடும்.

நேத்து நான் எங்க அபார்ட்மெண்ட்ல நடந்து வரும் போது 3 குட்டீஸ்வளையாடிக்கிட்டு இருந்தாங்க.அவங்க பால் என்னோட கால் கிட்டவிழுந்துடுச்சு.எடுத்து கொடுத்தா "திதீ ஹமாரே சாத் கேலோனா(அக்கா எங்களோட விளையாட வாங்களேன்... )"ங்கராங்க..
செரிடாப்பா இங்கயும் தொடருதானு நினைச்சுக்கிட்டே "மே தோடிதேர் கே பாத் ஆவூங்கி(நான் கொஞ்ச நேரம் பொருத்து வரேன்)"ன்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே வந்தாலும் மனசு கெடந்து அடிச்சிகிட்டே தான் இருந்தது :(


P.S: நான் தமிழில் பிழை இல்லாமல் எழுத உதவிய திவ்யாவிற்கு நன்றி!

பாசவலை

$
0
0
தொப்புள் கொடி உறவு தந்த தாயின் அரவணைப்பில்
கண்டிப்பு கலந்த தந்தையின் கரிசனத்தில்
குட்டி தங்கையின் சுட்டி சிரிப்பில்
கள்ளமில்லா தூய நட்பின் நேசத்தில்
மரு-மகளாக சென்ற வீட்டினரின் பாசத்தில்
கணவனாகிப்போன ஆசை காதலனின் அணைப்பில்
தனக்குள் ஜனித்த சிசுவின் முதல் அசைவில்
தான் பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசத்தில்
அவள் குழந்தைக்கு பிறந்த குழந்தையின் மழலை மொழியில்
தான் கட்டுண்டு கிடப்பதை எண்ணி பெருமிதத்துடன் மகிழ்ச்சியில்
அது பாசவலைஎன்று உலகிற்கு பறைசாற்றுகிறாள் பெண்

அந்நிய மொழி படிக்கலாம் வாங்க

$
0
0

நாம தினமும் உபயோகப்படுத்தும் ஜிடாக்கல இந்த ரெண்டு பொண்ணுங்க எவ்ளோ நல்ல விஷயம் பேசிருக்காங்க பாருங்க


பிரியா:ஹாய் மாச்சா(மச்சி = Feminine Form என்று கொள்க) LTNS(Long Time No See)?


பூர்ணி:ஹாய்ய்ய்ய்ய் மாச்சா..எப்படி இருக்கே??


பிரியா:பாயின்டி எங்கே ஆளே ரொம்ப நாளா காணோம்?


பூர்ணி:கொஞ்சம் பிஜீ மாச்சா..ஆபீஸ், கிலாஸ்னு போகுது..


பிரியா:ஆபீஸ் சரி உங்க PL "நச்சு நாகய்யா" தொல்லை தாங்கலய்யா?அது சரி என்னடி கிலாஸ்னு எல்லாம் சொல்றே?


பூர்ணி:ஆமாடி நாங்களும் படிக்க ஆரம்பிச்சுடோம்ல


பிரியா:என்ன நடக்குது இங்க பூஸ்(பூர்ணி = செல்ல பெயர்)


பூர்ணி:ஆமாடி நான் ஜாப்பனீஸ் கத்துக்க அரம்பிச்சுட்டேன்..


பிரியா:என்னடி திடீர்னு ஜாப்பனீஸ் எல்லாம்?


பூர்ணி:ஆமா மேடம்..சொல்லு நீயும் பொட்டி தட்டரே,நானும் பொட்டி தட்டரேன்,மத்தவங்களைவிட நமக்கு ஒரு எட்ஜ் வேண்டாமா?


பிரியா:ஜாப்பனீஸ் கத்துகறதால என்ன பெரிய வித்தியாசம்?


பூர்ணி:பாருடி இப்போ நம்ம கம்பனீஸ் எல்லாம் ஈஸ்டு சய்ட் நிறைய கான்சன்ட்ரேட் பண்ண அரம்பிச்சிடாங்க..இந்த ஜப்பான் காரங்களுக்கு இங்கிலீஷ் பேசினாலும்,அவங்க ஆக்சென்ட்டு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு புரிஞ்சுக்க..அதுனால அந்த மக்கள் மோஸ்ட்டா ஜாப்பனீஸ்லயே டாகுமென்ட்ஸ் வெச்சிருக்காங்க.


பிரியா:அதுனால நீ ஜாப்பனீஸ் படிச்சிட்டு டிராலான்சுலேட் பண்ணபோறியா?


பூர்ணி:ஆமாடி பாரு அந்த மாதிரி கிலயின்ட்ஸ் கிட்ட அவங்க லாங்குவேஜ்ல பேசி நல்லா ரிக்குவியர்மெண்ட்ஸ் கலெக்ட் பண்ணவேண்டிருக்கும்.ஸோ நாம அவங்க மொழில பேசினா உபயோகமா இருக்கும் இல்லியா?


பிரியா:ஆமாடி என்னோட பிரண்டு TCS-ல டிரேயினிங்லயே சொல்லித்தறதா சொன்னா.நம்ம சித்தூ கூட விப்ரோ-ல ஹைதராபாத் போயி படிச்சேன்னு சொன்னால! சரி எங்க கத்துகற?


பூர்ணி:நம்ம நுங்கம்பாக்கம் ஐசிஐசிஐ பாங்குக்கு கிட்ட ABK AOTS DOSAKAI-னு ஒரு இடம் இருக்கு.


பிரியா:என்னடி தோசகாய ,பப்பூனு சொல்ற :P


பூர்ணி:அட கொல்டி பெண்ணே நான் சொன்னது அந்த சென்டர் பேருடி ..கிர்ர்ர்


பிரியா:சரி சரி :D மேல சொல்லு


பூர்ணி:ஹம்..நான் சொல்றத கேளு..இந்த லாங்குவேஜ் படிக்க 4 லெவெல்ஸ் இருக்கு..JLPT எக்ஸாம்ஸ்னு சொல்வாங்க.லெவெல் 1 பாத்தீன்னா ரொம்ப பேஸிக்.


பிரியா:ஹேய் அவங்க எல்லாத்தயுமே படம் படமா வரையவாங்களே?


பூர்ணி:ஆமாடி ரெண்டு விதமான எழுத்து முறை இருக்கு ஹீராகானா கதக்கானானு..அப்புறம் நீ சொல்ற படங்களை காஞ்சினு சொல்வாங்க..லெவெல் 1 ல 200 காஞ்சி தான் இருக்கு..21 லெசன்ஸ் தான் இருக்கு..."இது பேனா","அது புத்தகம்" இது போல..


பிரியா:சூப்பர்டி ..ஈஸியா?


பூர்ணி:பாரு "வதாஷிவா பூர்ணி தெசு"(நான் பூர்ணிமா)","வதாஷிவா நிஹங்கோனோ ககுசேய் தெசு(நான் ஜாப்பனீஸ் ஸ்டூடெண்ட்)அப்படின்னு ரொம்ப சிம்பிள் ..குட்டி பசங்கலேர்ந்து..பெரிய அங்கிள்ஸ்,ஆன்டீஸ் கூட கத்துக்கறாங்க :)


பிரியா:நீ சொல்றதெல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு..காஸ்டிலியா இருக்குமோ?


பூர்ணி:இல்ல மாச்சா லெவெல் 1 கிலாஸ்க்கு Rs .3000/- தான் ஒரு வருஷத்துக்கு..நல்லாவே சொல்லிதறாங்க.


பிரியா:இது சூப்பரு..ஆமா எப்ப போற கிலாஸ்க்கு?


பூர்ணி:சண்டேஸ் காலைல 8.30 க்கு ஆரம்பிக்குது..3 மணிநேரம் கிலாஸ்


பிரியா:என்ன!! விடியகாலைல சொல்றே :((


பூர்ணி:போடி இவளே வாரத்துல ஒரு நாள் தானே..படிச்சா கை மேல பலன்.வேணும்னா நீ அடுத்த ஸ்லாட் வா, ஆனா நம்ம சென்னை வெயிலுக்கு 12.00 மணிக்கு முடிச்சிறது நல்லது தானே?


பிரியா:என்ன சொல்றே..கை மேல பலனா?


பூர்ணி:ஆமாடி ..நீ ஆபீஸ்ல உபயோக படுத்தாட்டியும் ஒரு மொழி கத்துகிட்ட மாதிரியும் இருக்கும்..நீயே ஒரு டிரான்சுலேட்டர் மாதிரியும் ஆகலாம்.


பிரியா:ஒ நம்ம சிங்கர் சின்மயி பண்ற மாதிரியா?


பூர்ணி:ஹேய் ஹோல்ட் ஆன் ஆசை படு பேராசை படாதே.முதல்ல கிலாஸ் சேரு :))


பிரியா:சரிங்க மேடம் ..எப்போ ஆரம்பிக்கராங்க?


பூர்ணி:இந்த எக்ஸாம்ஸ் ஒரு வருஷத்துக்கு ஒன்னு தான்..எல்லா டிசம்பர் மாசமும் நடக்கும்..என்னோட நாளைக்கி வா நானே சேர்த்துவிடறேன் :))


பிரியா :சரிடி ஷுர்..ஹேய் இத அந்த ரம்யா பொண்ணுக்கு கூட FYI அனுப்புவோம்


பூர்ணி:யாரு அவளுக்கா? இத கூட கொஞ்சம் மாத்தி ஒரு போஸ்ட் போட்டிருவா..போட்டதோட மாச்சாஸ் என்னோட புது போஸ்டு படிங்கனு ஒரு மெயில் நமக்கே தட்டிருவா ..கிர்ர்ர்


பிரியா:விடுடி ஏதோ நல்ல விஷயம் நாலு பேருக்கு போயி சேருது இல்லியா?


பூர்ணி:அதுவும் கரெக்ட்தான்..ஒகேடி மாச்சா..பை பை.


பிரியா: ஒகே பை நாளைக்கு கால் பண்றேன்...


என்ன மக்களே நான் பண்ணது கரெக்ட்தானே..இவங்க சொன்னத நான் உங்களுக்கு சொல்லிட்டேன்..என்ன நாமளும் போலமா??


யுகப்புரட்சி

$
0
0
சூரியன் உதித்து சில நிமிடங்களே முடிந்து காலை பனி விலகாமல் ,இது சென்னை மாநகரம் தானா என்று வியக்கவைக்கும் அந்த ரம்மியமான காலை நேரத்தில்,சென்னையின் முக்கிய சாலையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது அந்த நீல நிற ஆல்டோ கார்.

பித்தனையும் கவிதை என்று பிதற்ற வைக்கும் இந்த அற்புதமான தருணத்தை ரசிக்காமல் ஒரு முக்கிய வேலையாக சென்று கொண்டிருக்கிறார்கள் ரமணன் ராஜி தம்பதி.

காரின் வேகம் குறைந்து கோபாலபுரத்திற்குள் நுழைந்து சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மணிமொழியன் வீட்டின் முன் நின்றது.

"ஏங்க நல்ல விதமா அமைச்சர் கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணிடலாம்னு நினைக்கிறீங்களா"

"நம்பிக்கையா இருமா, எங்க ஹாஸ்பிடல் டீனோட நல்ல நண்பர் இவரு.நம்மளோட உழைப்புல முழு நம்பிக்கை வெச்சுத்தான் எங்க டீன் நரசிம்மன் சார் நம்மள இங்க அனுப்பிருக்காரு"

ஒரு மாநில அமைச்சரை பார்க்க மேற்கொள்ளவேண்டிய அனைத்து கட்டுப்பாட்டு விதி முறைகளையும் செய்து முடித்து ஆவலுடன் அவருக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

அரசியல் என்பதை ஒரு வியாபாரமாக கருதாமல் இருக்கும் ஒரு சில அரசியல்வாதிகளில் திரு.மணிமொழியனும் ஒருவர்.சாதாரண மக்களும் அணுகக்கூடிய பண்பானவர்.

சொன்ன நேரத்திற்கு வீட்டு வரவேற்பரையில் அமர்ந்திருக்கும் ரமணனையும்,ராஜியையும் நோக்கி கரம் குவித்து "வாங்க டாக்டர் ரமணன்.வாங்கம்மா"

"வணக்கம் சார்.உங்களோட பரபரப்பு நிறைந்த நாளில் எங்களை சந்திக்க நேரம் ஒதுக்கினதுக்கு நன்றி சார்"

"அடடே முதல்ல நீங்க என்ன தப்பா நினைக்க கூடாது.நரசிம்மன் சார் உங்களப்பத்தி நிறைய பேசியிருக்காரு.ஒரு மணி நேரத்தை உங்க கூட இந்த விடிய காலையில் செலவழிப்பது பயனுள்ளதாகத்தான இருக்கும்னு எனக்கும் உங்க திறமை மேல நம்பிக்கை இருக்கு டாக்டர்.

மேலும் நீங்க நினைக்கலாம் என்னடா இவன் இதெல்லாம் ஆபீஸ்லயே வெச்சு பேசலாமேன்னு.ஆனா விடியகாலைல தான் நம்மளோட மூளை சுறுசுறுப்பா இயங்கும்.நீங்க சொல்லப்போறதை நான் நல்லா கிரகிக்க வேணும்னா இது தான் சரியான நேரம்னு நெனச்சேன்"

"ரொம்ப சந்தோஷம் சார்.நான் நேரா விஷயத்துக்கு வரேன்.நாம இப்போ பாக்கப்போறது எங்க இருவரோட சில கால ஆராய்ச்சியின் பலன்.கணிணி துறைல நாம நிறைய செய்யறோம்.அதை எப்படி நம்ம மருத்துவ துறைல இன்னும் சிறப்பா பயன்படுத்தலாம்னு நினைக்கும் போது உருவான கான்செப்ட் தான் இந்த ஹெல்த் மானிட்டர்."

"இன்டரெஸ்டிங்.மேல சொல்லுங்க"

ஒரு சின்ன மடிக்கணிணி போன்ற ஒன்றினை காண்பித்து "இது பயன்படுத்தறது ரொம்ப சுலபம்,ஒரு சாதாரண கம்பியூட்டர்ல லாகின் பண்றமாதிரி அவங்க பெயரை முதல்ல செலக்ட் பண்ணனும்.அப்புறம் முதல் தடவைன்னா,அவங்களோட பர்த் சர்டிபிகேட்-ல இருக்கும் நம்பர் கொடுக்கனும்,அதுவே அவங்க வயசு,அட்ரஸ் எல்லா விவரத்தையும் கொடுக்கும்.அதுக்கபுறம் அவங்க சுகர்,பிபி,ஈசிஜி எல்லா விவரத்தையும் இங்க இருக்கும் அதற்கேற்ற, மீட்டர்களில் பதிஞ்சிடனும்.

முக்கியமா அவங்க எந்த ஹாஸ்பிடல் போறாங்களோ அதை செலக்ட் பண்ணிட்டு இந்த அப்டேட் பட்டன் அழுத்திடீங்கன்னா, Web servicesமூலமா அந்த ஹாஸ்பிடல் டேடாபேஸ்-ல சேவ் ஆகிடும்".

"இதுக்கு எல்லா ஹாஸ்பிடல் விவரமும் திரட்டனும் இல்லியா?"

"இந்த திட்டத்தின் பெரும் பகுதி வெற்றியே அதுல தான் இருக்கு.டாக்டர்கள் எல்லாரும் வெவ்வேறு இடங்களில் வேலை செய்யறாங்க.அவங்க எல்லாரையும் இனைத்து,ஹாஸ்பிடல் எல்லாம் அரசின் நேரடி கட்டுப்பாட்டிலோ,இல்ல அரசு சார்ந்த ஹாஸ்பிடலாவோ இருக்கனும்.இந்த மாதிரி பண்ணா,எல்லா மக்களுக்கும் நல்ல பயன் கிடைக்கும்"

"நீங்க சொல்றது நடைமுறைல வர கொஞ்சம் காலம் ஆகும்.ஆனா எல்லா மாறுதலும் இப்படி தானே தொடங்குது.மேல சொல்லுங்க"

"இப்போ ஒரு ஹாஸ்பிடல் எடுத்துகிட்டீங்கன்னா,எல்லா பேஷன்ட்கும் ஒரு தனி அக்கவுண்ட் வெச்சிருக்கனும்.ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வேணுமா இல்ல ஜிபி பொதுமான்னு அவங்க டீடெய்ல்ஸ் பாத்து மானேஜ்மெண்ட் ஆபீஸ்லயே கொடுத்திருவாங்க.இதுனால ஒவ்வொரு டாக்டருக்கும் சரியான அளவில பேஷன்ட்ஸ் இருக்காங்களான்னு தெரிஞ்சிடும்.டாகடர்ஸும் அவங்களுக்குனு இருக்கும் பேஷன்டோட அக்கவுண்ட் போயிட்டு அவங்க ஹிஸ்ட்ரி எல்லாம் பாத்திடுவாங்க"

"இதுனால திரும்ப எல்லா டெஸ்டும் எடுக்கும் கால விரயம், பண விரயம் எல்லாத்தையும் குறைக்கலாம்.இதுல வேற என்ன பயன்?"

"கண்டிப்பா சார்.இன்னும் இருக்கு.டாக்டர்ஸ், பேஷன்ட்ஸ் ட்ரீட்மென்ட் விவரம் எல்லாம் இதுல பதிஞ்சு இருக்கறதுனால,Business Intelligenceமூலமா,ஒரு நாளைக்கு எவ்வளவு பேஷன்ட்ஸ் வராங்க,எவ்வளோ நபர்களுக்கு சரியாகுது,எந்த வியாதிகளுக்கு ட்ரீட்மென்ட் Procedures நல்லா இருக்கு இப்படி பல விதமாக ரிப்போர்ட்ஸ் கிடைக்குது.இதை வெச்சு மானேஜ்மெண்டோ,அரசோ முடிவெடுக்கலாம்", சொல்லும்போதே ராஜினியின் குறலில் நம்பிக்கை தெரித்தது.

"அருமை அருமை.இது தான் சிவனும் சக்தியும் சேர்ந்து,சிவசக்தியா ஒரு நல்ல வழி காட்டுவதா!எனக்கு இதை பற்றிய குறிப்பு எல்லாம் கொடுங்க.நேரம் இருக்கும் போது முதலமைச்சர் கிட்ட பேசறேன்.அருமையான திட்டமா தெரியுது"

"ரொம்ப நன்றி சார்,நாங்க சொல்ல வந்தத இவ்வளோ பாசிடிவ்வா நீங்க எடுத்துப்பீங்கன்னு நெனைக்கலே"

"இதுல்ல என்ன இருக்கு ரமணன் சார்,உங்கள மாதிரி நம்ம நாட்டுக்கு ஏதாவது செய்யனும்,மருத்துவத்தை "மா" தவமா செய்பவரும்,உங்களுக்கு ஏற்ற துணையான உங்க மனைவி போன்ற மக்களையும் பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு"

ரமணனுக்கும் ராஜிக்கும் ஒரு யுகப்புரட்சிக்கு வித்திட்ட மகிழ்ச்சியில் மனது குதூகளித்தது.

P.S:
1. இக்கதை சிறில் அலெக்ஸ் அவர்களின் "அறிவியல் சிறுகதை" போட்டிக்காக எழுதியது!

2. இக்கதை ஹெல்த் மானிட்டர் பற்றிய செய்தியின் மேல் என்னுடைய கற்பனை கலந்து எழுதியது!

கிச்சன் கில்லாடி

$
0
0
சமையல்என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும்.

என்ன சுலபமா சொல்லிட்டாங்க? ஆனா நீங்க ஒரு கில்லாடி ஆகணும்னா என்ன பண்ணனும்?அதைச் சொல்லத்தானே இந்த பதிவு கவனமா குறிப்பு எடுங்க!

சமையல் ஒரு கலை அதில் நீங்க வெற்றிப்பெற இரண்டு முக்கியமாத் தேவை.முதல்ல நீங்க பயிற்சி செய்ய ஒரு களம், அதை சமையல்கட்டுன்னும் பேச்சு வழக்குல சொல்லலாம்,அடுத்து நீங்க உழைச்சு,களைச்சு செய்யும் பதார்த்தத்தை சாப்பிட குறைந்தபட்சம் ஒரு ஜீவன்(அப்பா,கணவன்,சில நேரத்துல அம்மா/ரூம்மேட்ஸ்-as applicable).Practise Makes a Man Perfect இல்லியா??

இப்போ நான் சமைக்கறதையும் சாப்பிட ரெண்டு பிள்ளைங்க கிடைச்சிருக்காங்க ரூம்மேட்ஸ்னு.அதுனால நாங்க எல்லாம் சேர்ந்து அடிக்கடி சமைக்கும் சில சுலபமான Recipes இங்க இருக்கு.படிச்சு தைரியமா சமைச்சு பாருங்க.

1.பாம்பே சட்னி

முதல்ல இதுக்கு பெயர்க்காரணம் கேக்காதீங்க ஏன்னா எனக்குத் தெரியாது.சப்பாத்தியோட நல்லா இருக்கும்.

செய்முறை:

1.கடலை மாவையும்,கொஞ்சமா மஞ்சள் பொடியும் சேர்த்து நல்லாக் கட்டி இல்லாமல் தண்ணீரில் கலந்து வைக்கவும்.
2.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி இதெல்லாம் பொடியா நறுக்கி வைக்கவும்.
3.ஒரு வானலியில் கொஞ்சமா எண்ணெய் ஊற்றி,கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு எல்லாம் போட்டு தாளித்து,இஞ்சி,பச்சை மிளகாய்,வெங்காயம்,உப்புப் போட்டு வதக்கவும்.
5.இப்போ தக்காளியும் சேர்த்து வதக்கிட்டு, கரைத்து வைத்திருக்கும் கடலை மாவு தண்ணிய கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து விடாம பச்சை வாசனை போகும் வரை கிளரவேண்டும்.Semi solid state வந்தவுடன் இறக்கி விடவும்.
6.சூடு ஆறியவுடன் ,கொஞ்சமா எலுமிச்சம் பழச்சாறு விட்டா சட்னி ரெடி :)

2.பச்சைப்பயறு சுண்டல்

இது எங்க எல்லாருக்குமே பிடிச்ச ஒரு Dish.சப்பாத்தியுடனோ தனியாகவோ சாப்பிடலாம்.உடம்புக்கு ரொம்ப நல்லது.

செய்முறை:

1.பச்சைப்பயறு அரை மணி நேரம் ஊர வைக்கவும். குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
2.வெங்காயத்தை பொடியாகவும்,பச்சை மிளகாய் நீளமாகவும் அரிந்து வைத்துக்கொள்ளவும்.
3.ஒரு வானலியில் கொஞ்சமா எண்ணெய் ஊற்றி,கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு எல்லாம் போட்டு தாளித்து,பச்சை மிளகாய்,வெங்காயம் போட்டு வதக்கவும்.
4.எற்கனவே வேக வைத்து எடுத்த பயறு போட்டு கொஞ்சமா தண்ணி சேர்த்து கிளரவேண்டும்.
5.மிளகு பொடி கொஞ்சம் போட்டு,உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி எடுத்தா,சுண்டல் ரெடி !

3.பாஸ்டா

இது நம்ம ஊர்ல Macaroni-னு கிடைக்கும்.எஃலெஸ் இங்க வால்மார்ட்லயும் கிடைக்குது.சமைக்க சோம்பேறித்தனமா இருந்தா நாங்க சாப்பிடறது இது தான் :)

செய்முறை:

1.பாஸ்டாவை நல்லா முழுகும் அளவு தண்ணீரில் உப்புப் போட்டு கொதிக்க விடவும்.
2.அது நல்லா கொதிச்சு,தொட்டா Softah இருக்கும் போது இறக்கி வைக்கவும்.
3.ஒரு வானலியில் எண்ணை ஊற்றி,கடுகு,சீரகம் போட்டு வேக வைத்திருக்கும் பாஸ்டாவை போடவும்.
4.கொஞ்சமா மிளகாய்ப்பொடி போட்டு ஒரு முறை கிளரி விட வேண்டும்.
5.சூடா இருக்கும் போதே Tomato Sauce போட்டுக்கலாம். சீஸ் பிடிச்சவங்க அதையும் சேர்க்கலாம்.அது இல்லாமலே நல்லா இருக்கும்.
6.இதுல வெங்காயம் தக்காளி எல்லாம் பிடிச்சா சேக்கலாம்.

சரி இப்போ கொஞ்சம் டிப்ஸ் (விடறதா இல்லை :P)

1.வெங்காயம் சீக்கிரமா வதங்கனும்னா,எண்ணை இல்லாம வெறும் வானலில வதக்கலாம்.
2.சாம்பார்ல காரமோ,உப்போ ஜாஸ்தி ஆகிடுச்சா ஒரு சின்ன உருளைகிழங்க வெட்டிப் போட்டா சரி ஆகிடும்.

ஆனா நாம என்னதான் சமைச்சாலும் அம்மாவோட சமையல் எப்பவுமே சூப்பரா இருக்கேன்னு கேட்டா,அன்பு + அக்கறை சேர்த்து சமைச்சாப் போதும்னு சொல்லிட்டாங்க..எவ்வளவு உண்மை :))

A for Apple

$
0
0
நாணல் அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவு

A
http://abc.go.com/ -எனக்குப்பிடித்த சில சீரியல் பார்க்க,
http://amazon.com/ - கண்டதையும் வாங்க ;)

B
http://blogsearch.google.com/ - பளாக் தேட

C
http://www.coolhotmail.com/இதுவும் ஒரு மெயில் சர்வீஸ் தான் ..நமக்கு பிடித்தார் போல் ஐடி வெச்சுக்கலாம்(eg) rr@iamwhatiam.com ,
http://www.chennaionline.com/

D
http://deals2buy.com/

E
http://en.wikipedia.org/ -விஷயம் தெரிஞ்சிக்க ,
http://www.esnips.com/

F
http://www.freerice.com/-ஆங்கில அறிவை வளத்திக்கிட்ட மாதிரி ஆச்சு, எதோ உதவி பண்ணாமாதிரியும் இருக்கும் :),
http://www.frozenthoughts.com/இது எனக்குப்பிடித்த பத்திரிக்கை

G
http://www.google.com/

H
http://www.hindu.com/

I
http://www.imdb.com/பார்க்கும் படங்களை பற்றி தெரிஞ்சுக்க

J
http://www.jaffnalibrary.com/tools/unicode.htm

K
http://keetru.com/கதை கவிதை படிக்க,
http://www.kandamangalam.com/new/புத்தகம்,பாட்டு Download செய்ய

M
http://mail.yahoo.com/,
http://maps.google.com/- ஊர் சுத்த வழி தேட,
http://www.mouthshut.com/ -நல்ல Reviews படிக்க

N
http://www.ndtv.com/,
http://news.google.com/

O
http://www.orkut.com/

P
http://picasaweb.com/

R
http://www.rediff.com/index.html,
http://reader.google.com/யாரெல்லாம் Post எழுதிருக்காங்கன்னு தெரிஞ்சுக்க

S
http://smashits.com/ -பாட்டு கேக்க,
http://scribd.com/எனக்கு பிடித்த் புக் Download செய்ய

T
http://twitter.com/,
http://thenkinnam.blogspot.com/ -பாட்டு கேக்க,
http://www.tamilmanam.net/index.html


W
http://wordsmith.org/

Y
http://www.youtube.com/

நான் விரும்பி அழைக்கப்போகும் மூவர் தமிழ்மணத்திற்க்கு புதியவர்கள் ஆனால் வெகு நாட்களாக அழகாக எழுதிக்கொண்டிருக்கும் தனிப்பான்மையானவர்கள்

1.வெட்டிவம்பு விஜய் - எனக்குத்தெரிந்து இவர் எழுதாத தலைப்பே இல்லை..மிக அற்புதமான எழுத்தாளர்

2.விரிந்தசிறகுகள் திவ்யபிரியா- கதை,கவிதை,நகைச்சுவை என்று எழுதும் சகலகலாவல்லி!!

3.பிரியா-என்னுடைய பதிவுகளின் முதல் வாசகி,என் உயிர் நண்பி,கவிதாயினி பிரியா :))


Rule:
The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites.
Tag 3 People.

நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-1

$
0
0

வாரநாட்களின் பரபரப்பு இல்லாமல் அமைதியான சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு உத்ரா குறுக்கும் நெடுக்குமாக கூடத்தில் யோசனையோடு நடந்து கொண்டிருந்தாள். இதைப்பார்த்த அவள் அண்ணன் மஹேஷ்,"என்ன உத்ரா வீக்கெண்டு இவ்ளோ சீக்கிரமா உனக்கு விடிஞ்சிருச்சு என்ன எங்கேயாவது ஊர் சுத்த போறியா?"என்று அவளை சீண்டினான்.


தலையை சிலுப்பி அவனைப்பார்த்து முறைத்துவிட்டு, "தோ பாருடா நானே டென்ஷனா இருக்கேன் என்னோட வாயை பிடுங்காதே எதாவது சொல்லிடபோறேன்!"


"அட இங்க பாருடா இவ சொல்ற வரைக்கும் என்ன நாங்க சும்மா இருப்போமா. ஏதோ பாவம் இன்னிக்கி உன்ன அம்மா ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாளே..நீயும் வேற குட்டிப்போட்ட பூனையாட்டம் சுத்திண்டு இருக்கியேன்னு கேட்டா எனக்கு இன்னும் தேவை தான்"


இவர்களின் சம்பாஷனையைக்கேட்டுக்கொண்டே வந்த கமலாப்பாட்டி, "ஏன்டா கண்ணா அவளை வம்பிழுக்கறே? இன்னிக்கி அந்த பையன் வீட்லேர்ந்து வந்து பாத்திட்டு போனாங்கன்னா குழந்தைக்கு சீக்கிரமா கல்யாணம் ஆயிடும்.அப்பறம் நீ இப்படியெல்லாம் அவளைப்பேச முடியாது"


"என்ன பாட்டி நீங்க அதுக்குள்ளே கல்யாணம் வரைக்கும் போயிட்டீங்க..நானே என்ன பேசறதுன்னு பயங்கற குழப்பத்துல இருக்கேன்"


"அடடே என்னோட தங்கை பேச கூட யோசிப்பாளா!!"


"குழந்தே சும்மா இரேண்டா! நீ சொல்லுடி தங்கம் உனக்கு என்ன கவலை"


"பாட்டி நீயே சொல்லு அந்த ஆன்டி என்ன கோவில்ல பார்த்தாளாம்.அப்பறம் ஒரு கல்யாணத்துல பார்த்துட்டு அப்பா கிட்ட பேசி இதோ இன்னிக்கி பொண்ணு பாக்கறவரைக்கும் வந்திருக்கு..அம்மாவும் அப்பாவும் நீங்கள்ளாம் கூட என்னோட கருத்த கேக்ககாம ஒத்துக்கிட்டீங்க..எப்படி பாட்டி நான் ஒன்னுமே தெரியாத பையன கல்யாணம் பண்ணிகிட்டு,லைஃப் முழுக்க ஷேர் பண்ணுவேன்? கேக்கவே சகிக்கலை"


"என்ன உத்ரா யாரயாவது லவ் பண்றியா?? அதச்சொல்ல பயந்துகிட்டு இப்படியெல்லாம் மழுப்பறியா?நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்..Dont Worry My Dear Sis"


"அட என்னோட ரேஞ்சுக்கு யாருமே கிடைக்கலைடா"என்று கூறி அவனுக்கு பழிப்புக்காட்டினாள்.


பரிவுடன் அவள் கூந்தலை வருடிக்கொண்டே"உத்ரா உன்னோட கவலை எனக்கு நல்லாவே புரியுதுடா கண்ணா.பாரு அரேஞ்சுடு மேரேஜ்னா இதெல்லாம் சகஜம் தானே.சரி உனக்கு நான் சொல்றது பிடிச்சிருந்ததுன்னாக்க அப்படியே பேசு சரியா?"


மகிழ்ச்சியுடன் பாட்டியிடம் வந்த உத்ரா,"Come On பாட்டி சொல்லுங்க".ஏதோ மொக்கை மேட்ச் பார்க்க் உட்காந்த மஹேஷ் ஆஃப் பண்ணிவிட்டு வந்தமர்ந்தான்.


"சரி அந்த பையன் பேரு என்ன?"


"கோதம் பாட்டி" கிரீச்சிட்டான் மஹேஷ்.


"கோதமும் இல்ல ஹிக்கிம் போதமும் இல்ல அவன் பேரு கவுதம்"


"இதோ பாரு உத்ரா முதல்ல நீ அந்த பையன "அவன் இவன் வாடா போடா"ன்னு சொல்லாதே.என்ன தான் பசங்களுக்கு பொண்ணுங்க செல்லமா அப்படி கூப்பிடறது பிடிக்கும்னாலும் முதலேயே அப்படி கூப்பிடாதே.வாங்க சொல்லுங்கன்னு சீன் போடு,அவனா கொஞ்ச நேரத்துல நீ என்னை வா போன்னு சொல்லலாம் எதுக்கு இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்னு சொல்வான் அதை அப்புறம் கெட்டியா பிடிச்சிக்கோ"என்று கண் சிமிட்டினாள்.


"அட அட என்னமா கவுக்கறீங்கப்பா ஒரு பையன"


"பாருடாமா அப்புறம் அவங்க இன்னிக்கி உன்ன பொண்ணு பாக்க வராங்கன்னாலும் எல்லாமே விசாரிச்சிருப்பாங்க..இது ஒரு சம்பிரதாயத்துக்குத்தான்.அவங்க வீட்லயும்,பையனுக்கும் உன்ன பிடிச்சிடுச்சாம்.நீ எப்பவுமே இருக்கறாப்போல இயல்பா இரு.உனக்கு ஏதாவது பையன்கிட்டக்கேக்கனும்னாலும் பேசு"


"அது தான் பாட்டி பெரிய பிரச்சனையே என்னன்னு பேசுவேன்.நான் முன்ன பின்ன பாத்தது கூட இல்லியே..அன்னிக்கி அவரோட கஸின் கல்யாணம் அதுக்குக்கூட இல்லாம ஆபீஸ் போயிட்டார் சின்ஸியர் சிகாமணி"


சிரித்துவிட்டு "முதல்ல பேசச்சொல்லும்போது கொஞ்சம் தயக்கமாத்தான் இருக்கும் ஆனா பேசினாத்தானே ஆகும்"


"ஏன்டி என்கிட்ட இவ்ளோ வாயடிக்கறே அவர் கிட்ட பேசமாட்டியோ?"


"ஹிம்ம் இதத்தான் சொல்ல வந்தேன். நீ முதல்ல எதுவும் பேசாதே.அந்த பையன பேசவிடு..நல்லா அப்சர்வ் பண்ணு எப்படி பேசறான்,எதைப்பத்தில்லாம் பேசறான்,தற்பெருமை அடிக்கறானா.ஒருத்தர் பேசும் விதம் வார்த்தைய வெச்சுக்கிட்டே நீ கம்பர்டபிளா பீல் பண்றியான்னு தெரிஞ்சுக்கலாம்"


"என்ன பேசினா எப்படின்னு புரிஞ்சுப்பேன்?"


"அவங்க அம்மா அப்பா குடும்பம் பத்தி சொன்னா,அவங்கத்தான் எனக்கு முக்கியம்..நீ அவங்கள அட்ஜஸ்ட் பண்ணிக்கனும் அப்படினின்னுப்பேசினா கேட்டுக்கோ.அப்படி பேசும் பசங்க உன் மேலேயும் பின்னாடி அக்கறையா இருப்பாங்க.

நீயும் உங்க அம்மா அப்பா குடும்பத்தப்பத்தி சுருக்கமா சொல்லிடு.அடுத்து உன்னோட வேலைப்பத்திக்கேட்டா, பாரதி கண்ட புதுமைப்பெண் நான் தான் அப்படின்னு ஒரேடியா பேசாம, எனக்கு கேரியர் முக்கியம் தான். அதுக்காக குடும்பத்துக்கும் முக்கியத்துவம் தருவேன் அப்படின்னு பொறுமையா சொல்லு.ஒரு அந்நியன் கிட்ட பேசும்பொது நீ எப்படி பேசுவியோ அப்படி பேசனும் ஆனா முக்கியமான விஷயத்தையும் சொல்லிடனும்"


"மொத்ததுல இவ வால சுருட்டி வெச்சுக்க சொல்றீங்க!"


மஹேஷை முறைத்திவிட்டு "ஏன் பாட்டி ஒரு 10 நிமிஷத்துல எப்படி முடிவு பண்றதாம்?"


"அதான்டிப்பொண்ணே சொல்றேன்..இன்னிக்கி கொஞ்சமாத்தான் தெரியும் உனக்கு..எப்படியும் மத்த விஷயமெல்லாம் பேசி இந்த இடம் முடிவாச்சுன்னா கொஞ்சம் கொஞ்சமா தெரியும்.நானே உனக்கு எப்படி அணுகறதுன்னு சொல்றேன்"


பாட்டியை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு "சோ சுவீட் பாட்டி நீங்க!"


"பாட்டி பாவம்டி விடு உன்னோட வெயிட் அவங்க தாங்க மாட்டாங்க" மஹேஷ் இப்படி அவளை வம்பிழுத்துக்கொண்டிருக்கும் போதே வாசலில் மணிஅடிக்க திறந்தவன் அப்படியே அசந்து நின்றுவிட்டான்.


(தொடரும்)

நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-2

$
0
0
பகுதி- 1

வாசல் கதவைத்திறந்த மஹேஷ் அசந்து நிற்க, "வழி விடேன்டா"என்றவாறு உள்ளே வந்து கொண்டிருந்தார் சங்கரன்.

"யாரு மஹேஷ்" என்ற பாட்டியும், "நான்தான்மா" என்ற குரலைக்கேட்டு வந்த உத்ராவும் கூட திகைத்துவிட்டனர்.

"என்ன எல்லாம் அப்படியே நிக்கறீங்க? அம்மா, ரேவதி எங்க கோவிலுக்கா?சரி மஹேஷ் நீ போய் அம்மாவ சீக்கிரம் கூட்டிட்டு வந்திடு என்ன உத்ரா நீ இன்னும் குளிக்கவேயில்லியா?போ மச மசன்னு நிக்காதே" என்று அதட்டிக்கொண்டிருந்தார்.

"எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகனும்! என்ன நடக்குது இந்த வீட்ல, சனிக்கிழமை கூட ஆபீஸே கதின்னு இருக்கும் ஒரு சின்ஸியர் கவர்ன்மென்ட் ஆபீஸர் இன்னிக்கி 10 மணிக்கே வீட்ல ஆஜர்,வாயாடியான என் அருமை தங்கச்சி பேச யோசிக்கறா, கல்யாணத்தன்னிக்கி தான் தாத்தாவ பார்த்தேன்னு சொல்ற பாட்டி Pre-Engagement Blues பத்தி பேசறா.ஒன்னுமே புரியல இந்த உலகத்துல.!!"

"இப்போ உன்னோட இந்த அச்சு பிச்சு கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற நேரம் இல்ல..நான் சொன்னத செய்..அம்மாகிட்ட சொல்லு உத்ராவ பெண் பார்க்க இன்னும் ஒன்றரை மணிநேரத்துல வராங்களாம்.அந்த பையனுக்கு ஏதோ ஆபீஸ்ல வேலையாம்.அதுனால அங்க போயிட்டு சாயந்திரம் திரும்பி வரமுடியாது,இங்க வேலைய முடிச்சிட்டு அப்படியே போறாராம் அவங்க அப்பா கூப்பிட்டு சொன்னாரு.போதுமா இனிமே கொஞ்சம் சுறுசுறுப்பா வேலை செய்யறீங்களா..ஒரே டென்ஷன் தான் எனக்கு"

இனிமேல் அங்கு இருந்தால் பாட்டு விழும் என்று மூவரும் உள்ளே சென்றனர்."பாட்டி நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன்" என்று சென்றுகொண்டிருந்தவளின் அருகில் வந்து "உத்ரா இன்னிக்கே குளிச்சிட்டு வந்திடு"என்று வம்பிழுத்துவிட்டு அவளின் சிணுங்கலை கவனியாமல் பைக் சாவியுடன் சென்றான்.

கமலாப்பாட்டியும் ரேவதியும் பலகாரங்கள் செய்ய, உத்ரா குளித்து ரெடியாக, மஹேஷும் சங்கரனும் வீட்டை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தனர்.
சொல்லியது போல் வந்த கவுதம் குடும்பத்தினருக்கு, உத்ராவின் பணிவும்,அழகும்,பாட்டும் பிடித்துவிட்டது.

"சரி நாமளே பேசிண்டிருக்கோம், அவங்க ரெண்டுபேரையும் பேச விடுவோம்" என்ற சுந்தரத்தின் அதிகார குரலைக்கேட்ட உத்ராவிற்க்கு வயிற்றில் ஏதோ பிசைவது போல் இருந்தது. கமலாப்பாட்டியின் கரம் வாஞ்சையுடன் முதுகில் விழ தைரியம் வந்தது.

தயக்கத்துடனே இருந்த கவுதமிற்க்கும் அவன் அம்மா பார்வதியின் கண் அசைவில் பலம் பெற்று தோட்டத்திற்க்குச் சென்றான். ஆனால் சென்ற 10 நிமிடங்களிலேயே வந்த தெளிவற்ற முகங்களைக்கண்ட பார்வதி எதையோ யூகித்தவாறு "சரி நமக்கு தான் இரண்டு குடும்பத்தையும் பிடிச்சுபோச்சே, இவங்க ரெண்டுபேரும் யோசிக்க கொஞ்சம் நேரம் கொடுப்போம்.ஒரே நாள்ல அவங்க எப்படி முடிவு பண்ணுவாங்க சின்ன பசங்க."

"சரியா சொன்ன பார்வதி, இவனும் ஏதோ பிராஜக்ட் டென்ஷன்னு சொல்லிட்டு இருந்தான்.நாங்க தான் இன்னிக்கே பொண்ண பாத்திடலாம்னு சொல்லி கூட்டிட்டு வந்தோம்.இந்த வாரத்துல நம்ம தொந்தரவு இல்லாம ஒரு நாள் இவங்க பேசி முடிவு பண்ணட்டும்.நீங்க என்ன சொல்றீங்க சங்கரன் சார்"

குழப்பத்துடன் அம்மாவையும் மனைவியையும் பார்த்து ஒப்புதல் கிடைத்தபின்னர்,"சரிங்க உங்க பையன் ப்ரீயா இருக்கும் ஒரு நாள் சாயந்திரமா சொல்லுங்க நாம ஒரு கோவில்ல பாத்து பேசுவோம்"என்றார்.
ஒரு முடிவுக்கு வந்தவர்களாக அவர்கள் விடைப்பெற்றுச் சென்றனர்.

மதிய உணவு முடித்து, சங்கரன் அபீஸ் பைல்களுடனும், உத்ராவும்,மஹேஷும் கையில் புத்தகத்துடன் பாட்டியின் மடியில் படுத்திருந்தனர்.அங்கு வந்த ரேவதி "என்னங்க வீட்லேயும் ஆபீஸ் வேலையா?"

"ஏன்பா நீங்க ஆபீஸ் நேரத்துல வேலய பாப்பீங்களா இல்லியா, இப்போ இவ்ளோ வேலை பாக்கறீங்க?"

"ஏ என்ன அப்பாவ வம்பிழுக்கறே?அவரென்ன உன்ன மாதிரியா ஆபீஸ் நேரத்துல பளாக் படிச்சிட்டு,6 மணிக்கப்புறம் வேலையிருக்குமா வர லேட்டாகும்னு ஸீன் போட.இல்லப்பா" என்று தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள்.

"அப்படி சொல்லுடிக்கண்ணு.ஆமா நீ இன்னிக்கி பாடின பாட்டு என்ன ராகம்?" என்று மெள்ள பேச்சை ஆரம்பித்தார்.

"அட இதுதெரியாதப்பா,நம்ம உத்ரா செம்ம டாலென்டட், "ஆனந்த பைரவில ஆரம்பிச்சு,பாதாள பைரவில" முடிச்சிட்டா தெரியுமோ?".

இதைக்கேட்ட உத்ரா சிணுங்கவும், அவள் செல்போன் சிணுங்கவும் சரியாக இருந்தது."இருடா சுவாதி கால் பண்றா,பேசிட்டு வந்து உன் கச்சேரி வெச்சுக்கறேன்" என்று மற்றவர்களின் பதிலுக்கு நிற்காமல் ஓடிவிட்டாள்.

"ஹிம்ம் கர்ணனுக்கு கவச குண்டலமாம் உங்க பொண்ணுக்கு செல்போனாம்"என்றாள் ரேவதி.

"சரி விடும்மா நீ சொல்லு உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?"

"ஆமாங்க அவங்க நல்லா பேசறாங்க,நானும் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிகொடுத்திருக்கேன்.உங்க பொண்ணு எனக்கும் மக தான்னு சொல்றாங்க.பையன பார்த்தாலும் நம்ம உத்ராவுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு"

"ஹிம்ம் நானும் அப்படிதான் நினைக்கறேன்.நீ என்னமா சொல்ற"

"சங்கரா நம்ம எல்லாருக்கும் பிடிச்சிருக்கு ஆனா உத்ரா சம்மதம் தான் முக்கியம்.நீ என்ன மஹேஷ் சொல்ற"

"என்ன பொருத்தவரை இந்த இடம் சூப்பர்.அந்த அங்கிள் என்ன "Mr.Mahesh"ன்னு கூப்பிட்டு குளுரவெச்சிட்டார்.என்னம்மா சரி சரி முறைக்காதே..என்னோட ஃப்ரண்டு அவர் கம்பனில தான் HRஆ இருக்கான் அவன வெச்சு நான் விசாரிச்சு சொல்றேன்.நீங்க பேமலி பத்தி விசாரிங்க சரியாப்பா?"

"அதெல்லாம் திருப்தியா விசாரிச்சப்புறம் தான் அவங்கள வரச்சொன்னதே.நீ தான் உத்ரா கிட்ட பேசிச் சொல்லனும்"

"என்ன நானா? அவகிட்டயா"

"ஆமாடா அவ சண்டை போட்டாலும் எதுன்னாலும் உங்கிட்ட தான் சொல்றா..இதையும் நீயே பேசிச்சொல்லு"

"என்னமோ சொல்றீங்க.பாக்கறேன்"என்றவன் உத்ராவின் அறைக்கதவைத்தட்ட எத்தனித்து, உள்ளே உத்ராவின் குறலில் கேட்பது சிணுங்கலா,அழுகையாயென்ற குழப்பத்தில் நின்று விட்டான்.

(தொடரும்)

நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-3

$
0
0
பகுதி - 1
பகுதி - 2


உத்ராவின் அறைக்கதவருகே சென்ற மஹேஷ் இவ்வளவு தூரம் வந்துவிட்டு பேசாமல் சென்று என்ன பயன் என்று கதவைத்தட்டினான். ஓசைக்கேட்டு, உள்ளே அவள் போன் பேசுவது நிறுத்திவிட்டு வருவதை மஹேஷ் கவனிக்க தவறவில்லை.

"என்னடா மஹேஷ் எப்ப வந்தே"என்று உத்ரா லகுவாக பேச முயன்றாள்.

"மேடம் என்ன என் கிட்டயே நடிப்பா, சொல்லு என்ன நான் கதவைத்தட்டின உடனே போன் கட் பண்ணிட்டே, யாருகிட்ட பேசின?"

"என்னடா என்னையே சந்தேகப் படறியா? நான் சுவாதிகிட்டதான் பேசினேன்.என்னன்னு கேக்காதே It's all Girl Talks"

"அட்ரா சக்கை. சரி நான் நேராவே சொல்றேன். உன்கிட்ட கவுதம் பத்திப்பேச வந்தேன்.எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.அவங்க பேமலி பத்தி எல்லாமே விசாரிச்சாச்சு.ரொம்ப திருப்தியாத்தான் அப்பா ஃபீல் பண்றாரு ப்ளஸ் கவுதம் ஆபீஸ்ல குமாரவெச்சு விசாரிக்க வேண்டியது என் பொறுப்பு.இப்போ நீ சொல்லு What is your opinion?"


"மஹேஷ் நீ இவ்ளோ பொறுப்பானவனா..நம்பவே முடியலடா"

"சீ உத்ரா திஸ் இஸ் நாட் தி டைம் டு கிட். அவரு கிட்ட நீ 10 நிமிஷம் பேசின ஆனா உன்னோட ரியாக்ஷன் வெச்சு எதுவுமே கண்டுபிடிக்க முடியல.பீ பிராங்க் வித் மீ"

"மஹேஷ், கவுதம் இஸ் ரியலி சூப்பர்ப்டா. நீ கூட என்னோட ரியாக்ஷன் வெச்சு டிரேஸ் பண்ணமுடியலையா.?என்ன முழிக்கறே.நாங்க ரெண்டு பேரும் பேசி வெச்சுகிட்டு தான் அப்படி கண்ப்யூஸ்டா இருக்கறா மாதிரி ரியாக்ட் பண்ணோம்."

"வாட்". நிஜமாகவே அலரிவிட்டான்.

"ஹே கத்தாதே. நானே சொல்றேன் என்ன பேசினோம்னு. பாரு அவருக்கு இன்னிக்கி ஆபீஸ்ல கோலைவ்.ஸோ போயி சப்போர்ட் பண்ண வேண்டிய நிலமையாம்.ஆனா அவங்க அப்பா அம்மா பொண்ண பார்த்திட்டு வருவோம்னு கம்பல் பண்ணதாலே வந்தாரு.ஆனா இது நம்ம லைப் டெசிஸன் . அதுனால நாம் கொஞ்சம் டைம் எடுத்து முடிவு பண்ணனும்.நிறைய பேசனும்.இன்னிக்கி முடியாது.நீயும் அதே மைண்ட் செட்ல தான் இருப்பே ,ஸோ நாம டைம் எடுத்து டிசைட் பண்ணுவோம்னு சொன்னாரு.எனக்கும் அவர் சொன்னது பிடிச்சுப்போச்சு"

"ஹே உண்மைய சொல்லு உனக்கு அவர் சொன்னது மட்டும் பிடிச்சிதா இல்ல அவரையே" என்றான் கண் சிமிட்டியவாறே

"ஆக்சுவலா சொல்லனும்னா எனக்கு முதல்ல இவரு சொல்றா மாதிரியெல்லாம் ஏன் பேசனும்னு தோணிச்சு.ஆனா அவர் எனக்கு சொன்ன விதம்,பேசின பேச்சு,சிரிப்பு, ஓப்பன்னஸ்,

முதல்ல என்ன மன்னிச்சிடு உத்ரா உன்கிட்ட எல்லாமே இன்னிக்கி பேசமுடியல, போன் நம்பர் தறியான்னு கேட்டுட்டு ரொம்ப யோசிச்சாரு.அப்பறம் ஏதோ மைண்ட் ரீடிங்க மாதிரி நான் நம்பர் கொடுக்க யோசிச்சப்ப அவரே ஒரு தீர்வு சொன்ன விதம் எனக்கு பிடிச்சுபோச்சு..எப்படி ஒருத்தர் என்ன இப்படி 10 நிமிஷத்துல இம்பிரஸ் பண்ணமுடியும்னு யோசிச்சுகிட்டே தான் வெளிய வந்தேன்"

"ஓ அதானா உன்னோட குழப்பமான ரியாக்ஷன்.சரி நம்பர் கொடுத்திட்டியா என்ன?"

"இல்லடா அதான் சொன்னேனே நம்பர் கேட்டாரு ஆனா நான் யோசிச்சேன்.அப்புறம் அவரே உங்கிட்ட என் நம்பர் கொடுக்கறேன்.உங்க அண்ணன் கிட்ட சொல்லு அவனுக்கு இது ஓகேன்னு பட்டிச்சின்னா அவன் நம்பர்லேர்ந்து பேசுன்னு சொன்னாரு.நீ என்ன சொல்ற மஹேஷ்?"

"பாரு உத்ரா எனக்கு தெரிஞ்சு இதுல எந்த பிரச்சனையும் இல்ல.ஆனா நீ செவ்வாய்கிழமைக்கு மேல பேசு.நான் அதுகுள்ள குமார வெச்சு விசாரிச்சிடறேன்.ஆனா பயங்கரமான ஆளு தான் போல.பேச வரும்போது அவர் அம்மாகிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்டாரு?"

"அவங்க அம்மாபத்தியும் சொன்னாரே.அவர் அம்மாபிள்ளையாம் அவங்கள மாதிரி தான் தன் மனைவியும் இருக்கனும்னு பீல் பண்றாராம்.ஆனா நீ நீயாவே இருன்னு சொல்லிட்டு ஒரு கான்ஸப்ட் வேற அரேஞ்சுடு மேரேஞ் பத்தி சாப்ட்வேர் டெர்ம்ஸ்ல சொன்னாரு"

We Give the Requirement , Our Parents Pick the Vendors and They quote
Finally the Successful Vendors get the Project.
So It is Development and Lifetime Support

இதைச்சொல்லிட்டு ஒரு சிரிப்பு வேற, வாஸ் ஸோ கியூட்டா என்ன சிரிக்கறே, பாரு நான் அப்பியரன்ஸுக்கு ரொம்ப முக்கியத்துவம் தர மாட்டேன்னு உனக்கே தெரியும்.ஆனா தேர் இஸ் சம்திங்க இன் ஹிம்டா. அவரும் இதையேத்தான் என்னப்பத்தியும் சொன்னாரு" சொல்லிவிட்டு அவள் முகம் அந்திவானமாய் சிவந்தது.

"அடடா அடடா உத்ரா வெக்கம்!ஹிம்ம், மக்களே ஆள பாத்து எடை போடக் கூடாது அப்படிங்கிறதுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. அம்மா தாயே என்ன பேசறதுன்னு முடிவு பண்ணிட்டியா?"

"ஹிம்ம் அத பத்தி தான் சுவாதிக்கிட்ட கூட பேசிட்டிருந்தேன்.அவ என்னடி அதுகுள்ள கடலையான்னு நக்கல் அடிக்கறா. பேசாம பாட்டியையே கேட்டா என்ன?"

"அம்மாடி நீ முடிவுல தான் இருக்க போல.நடத்து.ஸோ எனக்கு தெரிஞ்சு கவுதம் உன்ன இம்பிரஸ் பண்ணிட்டாரு,அவருக்கும் உன்ன பிடிச்சுப்போச்சு அதான் நம்பர் எல்லாம் கொடுத்திருக்காரு"

"சீ போடா" என்று உத்ரா வெட்கப்படவும் "ஆஹா இனிமே நாங்க எல்லாம் சீ தான்..விடு நானும் டி.ர் மாதிரி டயலாக் எல்லாம் ப்ரிப்பேர் பண்றேன் " என்று அவள் அறைவிட்டு வந்தான்.

அவளிடம் இப்படி சொன்னாலும் உத்ரா செய்வது சரியா என்று குழம்பினான். நேராக தோட்டத்தில் இருந்த பாட்டியிடம் சென்றான்.

அவனைக்கண்ட கமலாபாட்டி ஏதோ பொதுவாக பேசிக்கொண்டே இருந்தவர் அவனைப்பார்த்து "என்ன மஹேஷ் உத்ராகிட்ட பேசினியா என்ன அவ கவுதம் கிட்ட போன்ல பேசப்போறாளா?" என்று கேட்க ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டான்.

பாட்டிக்கு எப்படி தெரிந்தது நானே காட்டிக்கொடுத்துவிட்டேனா,
உளறிவிட்டேனா? இல்லை உத்ராவே சொல்லிவிட்டாளா ?ஆனால் அவள் இன்னும் பாட்டியிடம் பேசியதாக சொல்லவில்லையே? இப்படி பலவாறாக குழம்பியவனுக்கு கமலா பாட்டியே பதில் கூறினார்.
(தொடரும்)

நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-4

$
0
0

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

வியந்து நிற்க்கும் மஹேஷைக்கண்டு சிரிப்போடு,"என்ன மஹேஷ் அப்படி பாக்கற, என்ன நான் சொன்னது தான் நடக்க போகுதா?"என்றார்


"என்ன பாட்டி இப்படி கேக்கறீங்க அப்ப இது உங்க கெஸ்ஸா??"


"ஆமா இதை கண்டுபிடிக்க CBI ஆபீஸரா வரனும் நான் பாக்காத கல்யாணமா? உத்ரா முகத்துல குழப்பம் இருந்தாலும் அவ உதட்டோரத்துல ஒரு புன்னகை இருந்தது.அவங்க கிளம்பும்போது கவுதமும் உத்ராவும் பரிமாறிக்கிட்ட கண் அசைவும் தான் நான் இப்படிக்கேக்கக் காரணம்"


"யப்பா பாட்டி நீங்க 2 பொண்ணு, 2 பையனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சிருக்கீங்கன்னு ப்ரூவ் பண்றீங்க.ஆனா பாட்டி அப்பா தான் கோவில்ல மீட் பண்ணலாம்னு சொன்னாரே அதுக்குள்ளே இது தேவையான்னு தான் யோசனையா இருக்கு"


"கோவில்ல பேசும்போது அவங்களுக்கு ப்ரைவஸி கிடைக்கும்னு நினைக்கறியா? சாதாரணமா தானே பேசப்போறா எந்த பிரச்சனையும் வராது.உத்ரா நல்ல புத்திசாலி எங்க எப்படி பேசனும்னு தெரியும்."


"மெதுவா பாட்டி கேட்டா அப்படியே உச்சி குளுர்ந்திடும் அவளுக்கு,இப்பவே என்ன பேசறதுன்னு உங்க கிட்ட தான் கேக்க போறாளாம்"


ஒரு புன்னகை மட்டுமே பதிலாக தந்தார் முதியவர்.


சோம்பிவிடிந்த மறுநாள் ஞாயிறன்று, வீட்டில் ஆமைவேகத்தில் வேலைகள் நடந்தன.


சங்கரன் வீட்டில் ஒரு பழக்கம் இருந்தது,என்ன தான் அனைவரும் படிப்பு,வேலை என்று இருந்தாலும் சென்ற வாரம் வீட்டில் என்ன நடந்தது,அவர்களின் வெளி வாழ்க்கையில் என்ன நடந்தது என்று குடும்பமாக ஞாயிறு சாயந்திரம் பலகாரவேளையில் பேசி அலசுவார்கள்.இது குடும்பத்தில் பினைப்பிற்க்கும்,பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்கும் நன்மை பயக்கும் என்பதில் சங்கரன் ரேவதி தம்பதிக்கு திடமான நம்பிக்கை இருந்தது.


அதே போல் அன்றும் அனைவரும் பேச அமர்ந்தும், எல்லோர் மனதிலும் ஒரு யோசனை இருப்பதைப்பாத்த உத்ரா இது தன்னைப்பற்றி தான் என்று முடிவுக்கு வந்தாள். நாமே இதை சரிசெய்யலாம் என்று நினைத்தவளாய் தந்தையிடம் சென்றாள்.


"அப்பா நான் சொல்றத கேட்டு நீங்க கோவப்படகூடாது.பிராமிஸ் பண்ணுங்க"


"என்னமா நான் தேவையில்லாம உங்கள திட்டிருக்கேனா எங்கிட்ட என்ன தயக்கம் சொல்லுடா"என்று அவள் தலையை கோதியவாறே கூறினார்.


"ஹிம்ம் அப்பா இது நேத்து நம்ம வீட்ல நடந்தத பத்தி தான். ஒவ்வொருத்தரும் எதையும் "Presume"பண்ணாம வெளிப்படையா பேசுவோம். நான் சொல்ல வேண்டியதை சொல்லிடறேன்.

அவரும் நானும் ஜெனரலா பேசினோம்.வேலை டென்சன்ல சரியா பேச முடியாததுனால போன்ல பேசலாமான்னு கேட்டாரு,நான் தயங்கினதுனால அவர் நம்பர் கொடுத்திருக்காரு பேசச்சொல்லிருக்காரு.ஆனா உங்களுக்கு தெரியாம நான் எதுவுமே செய்து பழக்கம் இல்லாத்தினால உங்ககிட்ட சொல்றேன்.நீங்க என்னப்பா சொல்றீங்க?"


"உத்ரா எனக்கு உன்னப்பார்த்தா பெருமையா இருக்குமா.சரி இதை சொல்லு பேசினத வெச்சு என்ன பீல் பண்றே"


வெட்கத்துடனே"அப்பா அவரு ரொம்ப நல்லா பேசறாரு.அம்மா அப்பா மேல மதிப்பா இருக்காரு.I think he is closely connected to his family"


"உத்ரா நீ ஒன்னு தெரிஞ்சுக்கனும் நீ இன்னிக்கி பாக்கற கவுதம் வானத்திலேர்ந்து வரலே,அவரை இப்போ இந்த நிலமைக்கு கொண்டு வந்தது அவரோட அம்மா அப்பா தான். நாளைக்கே கல்யாணத்திற்க்கு அப்புறம் அவங்க அம்மாவ 'அம்மா'ன்னு மனசாற கூப்பிடறது உத்தமம்.

அப்பா உன்கிட்ட இப்போ கேக்கறது உன்னோட கனவைப்பத்தி.நமக்கு வரவரு இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும்னு உனக்கு எண்ணம் இருக்கலாம்.அதை அவர் மீட் பண்றாரா?" மகளின் தாயகவும்,கணவனின் மனதைப்படித்தவர் போலவும் ரேவதி பேசினார்.


"அம்மா கண்டிப்பா எப்படி அவரு அம்மா மாதிரி வைப் இருக்கனும்னு சொல்றாரோ அதே மாதிரி எனக்கும் வரவரு அப்பா மாதிரி ஆர்கனைஸ்டா,மஹேஷ் மாதிரி என்ன நக்கல் அடிச்சாலும் என் மேல கேரோட இருக்கனும்னு பீல் பண்ணுவேன். இவங்க தானே என்னோட ஹீரோஸ்"


"அப்பா உங்களுக்கும் எனக்கும் இப்போ ஜூரம் தான். தங்கச்சி என்ன போடா ஜீரோன்னு சொல்லாம ஹீரோவாக்கிட்டியே மா.இந்த அண்ணன் எப்படிமா தாங்குவேன் எப்படித் தாங்குவேன்!!"


"மஹேஷ்! ஹிம்ம் சொல்லுமா உன்னோட அப்படிப்பட்ட தேவை எல்லாம் மீட் பண்றாரா?"


"அப்பா என்னால 100% சொல்ல முடியல ஆனா நம்பிக்கை இருக்கு.நான் அவங்க பேமலியோட எப்படி அட்ஜஸ்ட் பண்ணுவேன்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு"


"உத்ரா நீ இவ்ளோ தெளிவா பேசறதே எனக்கு சந்தோஷமா இருக்கு.நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி பேசுவீங்களே அது பேரு என்ன?"
"சுவீட் நத்திங்ஸ் பாட்டி" என்று சொல்லி நாக்கை கடித்தாள் உத்ரா.

சிரித்துவிட்டு "ஹிம்ம் அப்போ அவரோட,அப்போ அவரோட,அவர் வீட்டாளுங்களோட விருப்பு வெறுப்பு,இயல்பு எல்லாம் தெரிஞ்சிக்கோ.நாளைக்கே உன்னோட நாத்தனார்,அவங்க பசங்க வீட்டுக்கு வந்தா நீ குறிப்பறிஞ்சு நடக்கறத பாக்கும்போதே அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்" அமைதியாகவும் தெளிவாகவும் விளக்கினார் கமலா பாட்டி.


"உத்ரா அப்பறம் நீ அவருக்கும் அவர் உனக்கும் தான் எல்லாமே.எதாவது மனகசப்பு வந்தாலும் நீ இந்த ஈகோவ மட்டும் வளக்காதே.

இரண்டொருதடவை நீ விட்டு கொடுத்து போனா தானா அவரு உன்னை மதிப்பாரு. உன்னை கேக்காம எதுவும் செய்யவும் யோசிப்பாரு" தன்னுடைய வெற்றிகரமான இல்லற ரகசியத்தை பகிர்ந்தார் ரேவதி.


"அம்மா கலக்கறீங்க விட்டுகொடுக்கறாமாதிரி நீங்க விண் பண்ணுவீங்களா?"


"அப்படி இல்ல மஹேஷ் நாங்க தான் எங்க பிறந்த வீட்டுக்கும்,புகுந்த வீட்டுக்கும் பாலம்.நான் கொடுக்கற பிக்சர்ல தான் உங்க அப்பாவோட மதிப்பே இருக்கு.ஸோ நான் பொறுமையா,விவேகமா,புத்திசாலித்தனமா இருக்கனும் இல்லியா?

உனக்கும் இதே தான். நீ எப்படி உன்னோட மனைவியை ட்ரீட் பண்றியோ அதை வெச்சு தான் மத்தவங்களும் நடப்பாங்க .புரியுதா?"


"அதுவும் சரிதான் உத்ரா உங்க அம்மா சொல்றதையே தான் செய்தா, செய்துகிட்டும் இருக்கா.எனக்கு தெரிஞ்சு நீ உனக்கு உன் கணவர் தரும் முதல் பரிச என்னிக்கும் பத்திரமா வெச்சுக்கோ.உங்க அம்மாவுக்கு நான் முதல்ல வாங்கி கொடுத்த ஹேன்ட் பேக இன்னும் பத்திரமா வெச்சிருக்கா.எனக்கும் அதை நினைக்கும் போது பெருமைதான்" மனைவியின் வெட்கத்தை பார்த்து பெருமை பொங்க கூறினார்.


வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக சிரிக்கும் ஓசைக்கு ஏற்றவாறு டெலிபோனும் ஒலிக்க, பேசிவிட்டு வந்த சங்கரன் "அவங்க வீட்லேர்ந்து தான் புதன் கிழமை பெருமாள் கோவில்ல மீட் பண்ணலாமான்னு கேட்டாங்க.நானும் சரின்னு சொல்லிட்டேன்"என்றார்.


"பெண் கிடைச்சாலும் புதன் கிடைக்காதாம்.எல்லாம் நல்லபடியா நடக்கும்"என்ற கமலா பாட்டியின் குரலை கேட்ட உத்ராவிற்க்கு ஒரு கவிதை தோன்றியது .


உன்னை நினைக்கும் போது துடிப்பது

என் இதயமா...?

இல்லையில்லை

என்னுள் இருக்கும் உன் இதயம்!


கிளுக்கி சிரித்தவாறே சென்றவளை பார்த்த நால்வரும் மனதாற அவள் சிறப்புடன் வாழ வாழ்த்தினர்.


(சுபம்)

P.S : என்னுடைய முதல் தொடர்கதையை தொடர்ந்து படித்த,கருத்து தெரிவித்த எல்லோருக்கும் மிக்க நன்றி :)

Blogging Friends Forever Award

$
0
0
எனக்கு இந்த அவார்ட் கொடுத்த அச்சச்சோ புகழ்-ஸ்ரீ, விஜய்,முகுந்தன்இவங்க எல்லோருக்கும் நன்றி.

நானும் இன்னும் 5 பேருக்கு தரணுமாம். நமக்கு நிறைய மக்களை தெரியுமே,நண்பர்களாச்சே யாருக்கு கொடுக்கலாம் நினைச்சா, சரிடாப்பா எல்லாரையும் சொல்லிட்டே வந்தா போச்சுன்னு தோணிச்சு..
ஸோ மக்களே ஒரு மினி கூகுள் ரீடரே இங்க குறிப்பிட்டிருக்கேன் .. சொல்ப அட்ஜஸ்டு மாடி :)

1.கவிதை, கதை இரண்டும் வெவ்வேறு விஷயம்ன்னு நினைச்சிட்டிருந்த எனக்கு..இரண்டுமே சேர்ந்தே இருப்பது அப்படின்னு விளக்கி,என்ன தமிழ்ல எழுத ஊக்கப்படுத்தின திவ்யாமாஸ்டர்க்கு முதல்ல நன்றி.

2.கவிதைக்கு விளக்கவுரை கேட்ட என்னை கவுஜ எல்லாம் படிக்க வெச்சு , இப்பல்லாம் நானும் எழுத முயற்சி பண்ணும் அளவுக்கு ஊக்கப்படுத்தின "தல"ஜி க்கு அடுத்து நன்றி :)

3.கதையெல்லாம் எப்படி எழுதறதுன்னு எனக்கு "கிராஷ் கோர்ஸ்" எடுத்த ஜாவா பாவலர், உயர்திரு தமிழ் அய்யா கப்பிநிலவருக்கு அடுத்து நன்றி :)

4.இவருக்கு பல விஷயம் தண்ணிபட்ட பாடு போல மிக மிக சுலபா வருது. பேனாவோ இல்ல கீபோர்டுன்னு சொன்னா,தூரிகையோ,கரண்டியோ இவர் சொல்ற பேச்ச அப்படியே கேக்குதாம். யாரு தெரியுதா சதங்காஅண்ணன் தான். அடடே அவர் பத்தி எழுதும் போதே இப்படியெல்லாம் எழுத தோணுதே..நீங்கள்ளாம் அவரோட சமீபத்திய கதை படிக்கனும், கவிதாயினி "ராமலஷ்மி" மேடமும் அவரும் பின்னூட்டத்திலே பேசிக்கறதுக்காகவே நானெல்லாம் கதை படிக்கறேன் :)

5.நச் நச் கவிதை,கதை,ஆன்மீகம்ன்னு எழுதும் கவிநயாஅக்கா..அட சொல்ல மறந்திட்டேனே இவங்க பாட்டும் சூப்பர்..சின்ன பொண்ணு வாய்ஸ் மாதிரியே ஸோ சுவீட் :)

சின்ன வயசுல எங்க பாட்டி சாதம் பிசைஞ்சு தரும் போது கடைசி வாய் சாதம் கொடுக்கும்போது "யானை குட்டி போல"ன்னு சொல்வாங்க..அது மாதிரி அஞ்சோட நிறுத்தாம நம்ம மத்த நண்பர்களையும் குறிப்பிடாம இருந்தா எப்படி..ஸோ ஹியர் கோஸ் தி லிஸ்ட் :))


ஆடு புலி ஆட்டத்துல பிஜியா இருக்கும் வெட்டி அண்ணன், கவிதாயினி பிரியா ,கதை+கவிதை+நகைச்சுவை எழுத்தாளர் திவ்யபிரியா,வெட்டிவம்பு விஜய்,எங்க ஊருக்காரரு முகுந்தன்,கவிதாயினி நாணல்,கவிதாயினி ஸ்ரீ, கவிதாயினி கார்த்திகா,கவிதாயினி ராமலஷ்மி மேடம், கவிஞர்கள் சதீஷ், சரவணகுமார்,ஸ்ரீ-ஒற்றை அன்றில், அம்பி அண்ணன், தங்கிலிஷ்லயே எழுதும் கில்ஸ் அண்ணாச்சி,தேண்கிண்ண சூறாவளி மை ஃபரண்டு,ரிலாக்ஸ் ப்ளீஸ் கயல் வருண்,சிங்கைல படிக்கும் துர்கா,ஜி3 அக்கா,தமிழ்மாங்கனி, வழிப்போக்கன்,இவன்,தாரணிபிரியா, தொடுவானம் தீபா,சமீபத்தில அறிமுகமான சுந்தர்,முருக்ஸ் எல்லோருக்குமே இந்த அவார்ட் என் சார்பா கொடுத்து நன்றி சொல்லிக்கரேனுங்கோ!

திண்ணை

$
0
0

திண்ணை பத்தி எழுத முருக்ஸ்கூப்பிட்டிருக்காரு.


சரியா சொல்லனும்னா எனக்கு திண்ணை அனுபவம் அவ்ளோ இல்லை. சின்ன வயசுல திருச்சிக்கு பெரியப்பா வீட்டுக்கு போகும் போது கொஞ்சம் அனுபவம் இருக்கு.நம்ம கஸின் கூட்டமெல்லாம் காவேரிக்கு போயிட்டு குளிச்சிட்டு சாவகாசமா வந்தா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி பெரியம்மாகிட்ட திண்ணைல உட்கார்ந்து பேசிட்டிருப்பாங்க. எங்களை பார்த்த உடனே, "என்ன இவ்ளோ நேரம் தண்ணில ஜலக்கிரீடை எல்லாம் ஆச்சா"ன்னு ஒரு நக்கல் பார்வை கொடுப்பாங்க.

எனக்குத்தான் துடுக்குத்தனம் அதிகமாச்சே "என்ன ஆன்ட்டி நீங்க இப்படி சொல்லிட்டீங்க..நாங்க துணியெல்லாம் துவைச்சு குளிச்சிட்டு வர வேண்டாமா. அதை விடுங்க,நேத்து நீங்க குடுத்தீங்களே பருப்பு உசிலி சூப்பர் ஆன்ட்டி.அங்கிள் கலக்கறாரு"ன்னு சொன்ன உடனே அவங்க கோவமா "யாரது ரமணி பொண்ணா அப்பா போலவே கிண்டலுக்கு குறைச்சலில்லே"ன்னு குறை சொல்லிட்டே "பாரு சந்திரா,இவங்கள சம்மர்ல இவ்ளோ சோம்பேறியா விடாத,டேபிள்ஸ் எழுத வை"ன்னு தேவையில்லாத அட்வைஸ் கொடுத்திட்டு போவாங்க.பத்த வெச்சிட்டியே பரட்டைன்னு நாங்களும் அதே திண்ணைல உட்கார்ந்து மாங்கு மாங்குன்னு எழுதுவோம் :(

காலேஜுக்கு போயிட்டு வர அண்ணன் நான் இன்னிக்கு அரவிந்த்சாமி வீடு வழியா வந்தேனா அவரை பார்த்தேனான்னு ரீல் சுத்தினதும்,கல்லாங்கா, பல்லாங்குழி,கேரம்,கார்ட்ஸ்,செஸ்,குரோகடைல் போன்ற முக்கிய கேம்ஸ் கத்துக்கிட்டதும்,பாட்டி சாதம் பிசைஞ்சு குடும்பத்துக்கே கைல கொடுத்ததும் அதே தின்ணைலதான் :).


சென்னைல நான் தின்ணை வச்ச வீட்ட பாத்ததே இல்லை.இப்ப எங்க வீட்ல ஒரு சின்ன மினி தின்ணை போல ஒரு அமைப்பு இருக்கும்.அதிகமா இரண்டு பேரு உக்காரலாம். அதுல உக்கார்ந்து பார்த்தா காலனிக்கு வரவங்க யாரு எல்லாம் தெரியும்னாலும்,எங்க அம்மாகிட்ட படிக்கற பிள்ளைங்க காலைல ஸ்கூல் பஸ் வரும் வரை உட்கார்ந்து படிப்பாங்கன்னாலும்,நான் பெரிய பெரிய ஃபிரண்டுஷிப்புடெவலப் பண்ணதெல்லாம் அங்கேதான்.


ஆனாலும் அந்த மினி-தின்ணைக்கு ஒரு பெரிய பெருமை இருந்தது.It was the house of my imagination.சரி சரி கண்டுக்காதீங்க ஒரு ப்ளோல வந்துடிச்சு :P

எனக்கு இந்த கோலம் போடறதுல்ல ஆர்வம் அதிகம்.அதுவும் இந்த பண்டிகை நாள்ல யாரு பெரிய கோலம் புள்ளி வெச்சதோ, Free Hand Design போடறாங்கன்னு ஒரு போட்டியே நடக்கும். கோலம் போடறது ஈஸி ஆனா இந்த கலர் கொடுக்கறது இருக்கே கொஞ்சம் பொறுமை வேணும்.

நமக்குத்தான் இந்த டீமாவே வேலை செஞ்சு(??) பழக்கமாச்சே..அதுனால உடன் பிறப்பை துணைக்கு கூப்பிட்டு, இதோ பாரு இந்த பூவுக்கு ஒரு ரஸ்டிக் கலரா டார்க் ஆரஞ்சுல கொடுத்தா எப்படி இருக்கும்?"ன்னு நான் ரேன்ஞ் காட்ட.அவ கடுப்பாகி "ஹிம்ம் உனக்கு என்ன இப்போ ஆரஞ்ஞோட கொஞ்சம் ரெட் கலந்து கொடுக்கனுமா நேரா சொல்லு"ன்னு சொல்லிட்டு போயிட்டு அங்கத்தான் கலர் மிக்ஸிங்க் பண்ணுவா.இதுல எங்க அப்பா வேற "அட பிகாஸா கூட இப்படி மிக்ஸ் பண்ணமாட்டரும்மா"ன்னு அவளை இன்னும் கடுப்பேத்திட்டு போவாரு.

கோலம் போடறதோட நம்ம வேலை முடியுதா இல்லியே. நமக்குன்னு ஒரு வாண்டுக் கூட்டம் (காசு கொடுத்து சேர்ந்த கூட்டமில்லே டெய்ரி மில்க்குக்காக தானா சேர்ந்த கூட்டம் ;) ) இருக்கே அவங்களோட எல்லார் வீட்டு கோலத்தையும் பார்த்திட்டு,ரம்யா அக்கா உங்க கோலம் தான் சூப்பருன்னு மறுநாள் டெய்ரி மில்க்குக்கோ,சொப்பு விளையாட்டுக்கோ அடி போட்டு போற குட்டீஸ வழி அனுப்பிட்டு அந்த மினி-தின்ணைல சோர்வா உட்கார்ந்து காத்தை சுவாசிக்கும் சுகமிருக்கே அது தாங்க வாழ்க்கை ஹிம்ம்ம்..


இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை விட்டு ஊருக்கு கிளம்பும்போது என்னோட தங்கைய கூப்பிட்டு "பாரும்மா நான் என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கறேன்.நான் சொல்லி கொடுத்தபடி கோலத்துக்கு கலரெல்லாம் போடு சரியா"ன்னு ஸீன் போட, அவ "இதோ பாரு நீ இப்ப ஒரு பிங்-பாங் பால் மாதிரி திரும்ப இங்க தான் வரனும்.ஒவர் ஸீன் உடம்புக்கு ஆகாது கெளம்பு காத்து வரட்டும்.ஏதோ ஒரு வருஷம் பெரியவளாச்சேன்னு பார்த்தா உன்னோட அலப்பரைக்கு அளவேயில்ல"ன்னு செல்லமா மிரட்டினாலும் ஒரு சோக பார்வைய அள்ளித்தெளிச்சிட்டுத்தான் வந்தேன் :(


இதுல இன்னும் இரண்டு பேர நாம கூப்பிடனுமாமே, திவ்யபிரியாவையும்,விஜயையும்இந்த சங்கிலியை தொடர அழைக்கிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

$
0
0

நண்பர்களே நம்ம ப்ளாக் உலகத்துல இன்னிக்கி ஒரு முக்கியமான நண்பருக்கு பிறந்தநாள்.


முதல்ல வாழ்த்திடுவோமா !!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல

யாருன்னு கண்டுப்பிடிக்க இதோ சில Clues தரேன். நல்ல பிள்ளையா சொல்லுங்க பாப்போம்


1.எல்லோராலும் "தல"ன்னு செல்லமா அழைக்கப்படுபவர்..நோ நோ நான் "தல" அஜித் சொல்லலே.அவர் படம் மாதிரி இல்லீங்க இவர் போஸ்டுக்கெல்லாம் செம்ம டிமாண்டாக்கும் :)


2.எல்லா போஸ்டையும் பொருமையா படிச்சு,கமெண்டும் நல்ல உள்ளம் கொண்டவர்.யாரது இப்படியெல்லாம் உங்க ப்ளாகுக்கு ஆள் சேக்கறீங்களான்னு கேக்கறது..ஹிம்ம்..


3.அலுக்காத காமெடி எழுத்தின் சொந்தக்காரர்.


4.கவிதையோ கதையோ எல்லாமே அருமையா எழுதுபவர்.ஆனா சில நேரத்துல படிக்கறவங்களையே முடிவை ஊகிக்கசொல்லுவாரு. Simplest Clue :)


5.சமீபமா அவரோட எழுதெல்லாம் பின்னவீநத்துவ எழுத்தாவே இருக்கு.. என்ன மாதிரி ச்சின்ன்ன பசங்களுக்கு புரிய மாட்டேங்குது :(((


6."இன்று ஒரு செய்தி" மாதிரி இவர் "பதிவுக்கு ஒரு புது தமிழ்ச் சொல்"ன்னு எழுதுபவர்.


7.தபு சங்கரின் விசிறி.


நீங்க தொடர்ந்து ப்ளாக் படிப்பவரா இருந்தீங்கன்னா இந்த Clues எல்லாம் ஒன்னுமேயில்லை.சுலபமா கண்டுபிடிக்கலாம்.

ஓகே கண்டுபிடிச்சு வாழ்த்துங்க பாப்போம் !!

Viewing all 26 articles
Browse latest View live